News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கலைஞர் நூற்றாண்டு விழா: புதிய மாற்றம் அறிவிப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ள இடம் மாற்றப்பட்டுள்ளதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் திரைத்துறையினர் சார்பில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவிற்கான அழைப்புகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டது. அதன்படி முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் 100 விழா டிசம்பர் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக இதன் தேதி […]

தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த்! முக்கிய தகவல்கள்!

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி மாவட்டத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தூத்துக்குடிக்கு சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், வேட்டையன் படப்பிடிப்புக்காக வந்தது தெரியவந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகும் வேட்டையன் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார்.  இத்திரைப்படத்திற்கான முதல்கட்ட படபிடிப்பு  கன்னியாகுமரியில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கேரளா, மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று தூத்துக்குடி […]

எண்ணூரில் டாக்டர் அன்புமணி! மருத்துவ சேவையால் மகிழ்ந்த பொதுமக்கள்!

எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் பொதுமக்களை பரிசோதித்து அவர்களுக்கு மருத்துவ சேவையாற்றி வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4ம் தேதகிளில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலின் போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டன. பெரு மழைவெள்ளம் மக்களின் வீடுகளுக்குள் புகுந்த நிலையில் அனைத்து பொருட்கள் நாசமானது.   அப்போது சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிந்து எண்ணூர் முகத்துவார பகுதி […]

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு! நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள்!

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (டிச.26) காலை அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கூட்டம் தொடங்கப்பட்ட போது சமீபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. நிர்வாகிகளின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெருமழை வெள்ளத்தால் உயிரிழந்த மக்களுக்காக ஒரு நிமிடம் […]

சென்னை விமானநிலையத்தில் வைத்து சம்பவம் செய்த தமிழிசை செளந்தரராஜனின் மகன்

கவர்னர் பதவியில் இருந்துகொண்டு ஆளும் தி.மு.க.வை கடுமையாக தொடர்ந்து விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக இருக்கும் தமிழிச்சை செளந்தரராஜன். இன்று சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில் அவரது மகன் சுகந்தன் தீடிரென, ‘பா.ஜ.க. ஒழிக’ என்று  சத்தம் போட்டு குரல் எழுப்பினர். உடனே அவரை பாதுகாப்புடன் அனுப்பிவைத்த தமிழிசை, என் மகனுக்கு உடல் நிலை சரியில்லை, அதனால் இப்படி பேசுகிறான் என்று சமாளித்தார். உடல் நிலை சரியில்லாத ஒருவர் இப்படித்தான் பேசுவாரா […]

அயோத்தி ராமரை தரிசிக்க நாடு முழுவதும் இலவச ரயில்… பா.ஜ.க. பலே ஏற்பாடு

அயோத்தியில் மிகப்பிரமாண்டமான ராமர் கோயில் கட்டும் பணி முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த கோயிலை அடுத்த மாதம் ஜனவரி 22-ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழா மிகவும் கோலாகலமாக நடக்கும் என்றாலும், நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டால், சமாளிக்க முடியாது என்பதால், பொதுமக்கள் திறப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அயோத்தி ராமரை தரிசிக்க பொதுமக்களுக்கு இலவச ஏற்பாட்டை பா.ஜ.க. அரசு செய்துதருகிறது. இதற்காக  ரயில்வே துறையில் நாடு முழுவதிலும் […]

புதிய கிரிமினல் சட்டங்களுக்கு ஜனாதிபதி அவசர ஒப்புதல்…. கொடூர சட்டம் என்று எதிர்க்கட்சிகள் ஆவேசம்

நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் சஸ்பெண்ட் செய்து வெளியே அனுப்பிவிட்டு, பா.ஜ.க. கொண்டுவந்த கொடூரமான கிரிமினல் சட்டங்களுக்கு ஜனாதிபதி திருவுபதி முர்மு அவசரமாக ஒப்புதல் கொடுத்திருப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் (1860), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (1898) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் (1872) ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றம் பாரதிய சாக்ஷியா […]

மீண்டும் எடப்பாடிக்கு சசிகலா வெள்ளைக் கொடி..!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரும்புக்கோட்டையாகத் திகழ்ந்த அ.தி.மு.க. நான்கு பிரிவாக நிற்கிறது. தினகரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதும் அ.ம.மு.க.வை தொடங்கிவிட்டார். சசிகலா அ.ம.மு.க.வுக்கு இன்னமும் முழுமையாக ஆதரவு கொடுக்காமல் அண்ணா தி.மு.க.வுக்குள் எப்படியாவது நுழைந்துவிட முடியுமா என்று தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறார். சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பன்னீரும் தினகரன் இணைந்து செயல்படுவதற்கு முடிவு எடுத்துவிட்ட நிலையில், சசிகலா மட்டும் தனியே நிற்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது தான் மட்டும் கட்சிக்குள் நுழைந்துவிட்டால் போதும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து […]

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.! மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டுள்ள கனிமொழி எம்.பி. பெரு மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக 4  மாவட்டங்களிலும் பெரியளவு சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெருமழை வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு மழையால் […]

மிக்ஜாம் புயல் பேரிடர்: ரூ.5 லட்சம் நிதி வழங்கிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார். கடந்த 3  மற்றும் 4 (டிசம்பர்) ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரியளவில் சேதத்தை சந்தித்தது. பொது மக்களின் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ள நீர் புகுந்து அவர்களின் அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியது. இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் […]