கேப்டன் இல்லத்தில் அஞ்சலி: மகன்களுடன் சென்ற சிவகுமார்!

நடிகர் சிவக்குமார் தனது மகன்களும் நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தியுடன் சாலிகிராமத்தில் உள்ள கேப்டனின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சென்னை தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். […]
வரப்போகுது மோடியின் தேர்தல் பட்ஜெட்… பெட்ரோல் விலை குறைப்பு, ரயிலில் டிக்கெட் சலுகை உறுதி

கடந்த ஒன்பது ஆண்டுகளாக மோடி அரசாங்கம் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், நேரடியாக மக்கள் பயன்படும் வகையில் எந்த ஒரு மெகா அறிவிப்பும் செய்ததில்லை. இந்த நிலையில் இன்னும் நான்கு மாதங்களில் தேர்தலை சந்திக்கவேண்டிய சூழல் மோடிக்கு இருக்கிறது. ஆகவே, பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் ஒரு இடக்கால பட்ஜெட்டாக இருக்கும் என்றாலும் தேர்தல் […]
கனிமொழி பிறந்த நாளில் வைரலாகும் எம்.ஜி.ஆர். புகைப்படம்… அமைதியான தி.மு.க. ஐ.டி.விங்

தென் தமிழக மக்கள் வெள்ளத்தில் இருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை என்பதால் என்னுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று கனிமொழி எம்.பி. அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், மற்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அவரது பிறந்த நாளை ஆதரவாளர்கள் வழக்கத்தைவிட அதிகமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளில் சின்னப் பிள்ளையாக எம்.ஜி.ஆர். மடியில் கனிமொழி அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு பாராட்டி வருகிறார்கள். இந்த படம் அ.தி.மு.க.வினர் மத்தியிலும் பரபரப்பாக பரப்பப்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் மழை தொடங்கிய […]
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் நிறைவேறுகிறதா..? அலறும் மாநிலக் கட்சிகள்

பா.ஜ.க. ஆட்சி அமைத்த காலத்திலிருந்தே ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போகிறது என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த ஆட்சி முடிவடைய இருக்கும் கடைசி சில மாதங்களில் இந்த சட்டத்தை நிறைவேற்றும் முடிவில் மோடி அரசு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான முதல்கட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நிர்வாக கட்டமைப்பில் சட்ட மாற்றங்களை செய்ய ஏதுவாக பொதுமக்களின் பரிந்துரைகளை பெறுவதற்கான பொது அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உயர்நிலைக் குழு […]
கலைஞர் நூற்றாண்டு விழா: முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் நடத்தப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருகிற 6ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயலால் தள்ளிவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழ்கள் முன்னதாகவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து […]
மிக்ஜாம் புயல்: முதலமைச்சரிடம் காசோலை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு!

மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.18) தொடங்கி வைத்தார். தமிழக அரசு கொண்டு வந்துள்ள ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தின் நோக்கம், பொதுமக்களின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்கவும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண வேண்டும் என்பதுதான். அதன்படி இன்று (டிச.18) கோவை மாவட்டம் என்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கோவை மாநகரட்சி 27 மற்றும் 28வது […]
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம்: நேரில் ஆய்வு செய்த கனிமொழி எம்.பி.

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பெய்த கனமழை பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு, அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி […]
கேப்டன் விஜயகாந்த் மறைவு! வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய சசிகுமார்!

கேப்டன் விஜயகாந்த் கடந்த (2023) டிசம்பர் மாதம் 23ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திலும், பின்னர் தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். படப்பிடிப்புக்காகவும், சொந்த காரணங்களுக்காகவும் வெளிநாடு சென்றிருந்த நடிகர்கள் சிலர் கேப்டனின் மறைவுக்கு […]
மோடியின் ஆதரவுடன் மிரட்டும் ஓ.பி.எஸ்..! நடுக்கத்தில் எடப்பாடியின் மாஜி மந்திரிகள்

சமீபத்தில் பாரதப்பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு எடப்பாடி மீது ஆவேசமாக தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறார். அதோடு பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருக்கிறோம். தினகரனுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்றும் தெளிவு படுத்தியிருக்கிறார். அதேநேரம், விரைவில் அண்ணா தி.மு.க. வலுவான கூட்டணியை அறிவிக்கும் என்று எடப்பாடி அறிவித்திருந்தாலும் எந்த ஒரு பெரிய கட்சியும் கூட்டணிக்குத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் எல்லாமே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரவே விரும்புகிறார்கள். பூவை ஜெகன்மூர்த்தி, சில துக்கடா இஸ்லாமிய […]
ஜீரோ ரன்னுக்கு 6 விக்கெட்… அச்சச்சோ… இந்தியாவின் மோசமான கிரிக்கெட் சாதனை

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் பேட்டிங் வரிசை அபார பலத்துடன் உள்ளது என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு கடப்பாரையால் அடி கொடுத்திருக்கிறது, தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி. இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் கேப்டவுனில் இரண்டாவது டெஸ்ட் ஆரம்பமானது. தென்னாப்பிரிக்கா பேட் செய்யத் தொடங்கியதும் இந்தியாவுக்கு ஆரம்பம் அட்டகாசமாக அமைந்தது. ஆம், 55 ரன்களில் தென்னாப்பிரிக்கா சுருண்டு போனது. தென்னாப்பிரிக்க […]

