News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் பேட்டிங் வரிசை அபார பலத்துடன் உள்ளது என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு கடப்பாரையால் அடி கொடுத்திருக்கிறது, தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி.

இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் கேப்டவுனில் இரண்டாவது டெஸ்ட் ஆரம்பமானது.

தென்னாப்பிரிக்கா பேட் செய்யத் தொடங்கியதும் இந்தியாவுக்கு ஆரம்பம் அட்டகாசமாக அமைந்தது. ஆம், 55 ரன்களில் தென்னாப்பிரிக்கா சுருண்டு போனது. தென்னாப்பிரிக்க அணியை இந்தியா வெறுமனே 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்குள் சுருட்டியது. ஆரம்பித்த  இரண்டு மணி நேரத்திலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துவிட்டது. முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தென்னாப்ரிக்க அணி எடுத்த 55 ரன்களே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராகும்.

தென் ஆப்ரிக்காவை 55 ரன்னுக்கு சுருட்டிய பிறகு கேப்டன் ரோகித் சர்மாவும் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். ரபாடா வீசிய மூன்றாவது ஓவரில் முதல் பந்தில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். 7 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்து வந்த சுப்மன் கில் அதிரடி காட்டியதால் இந்திய 10வது ஓவர்களிலேயே தென் ஆப்ரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை கடந்தது.

அதிரடியாக விளையாடி அசத்திய ரோகித் சர்மா அணியின் ஸ்கோர் 72ஆக இருந்த போது ஆட்டமிழந்தார். சுப்மன் கில் – கோலி ஜோடி இந்திய அணியை 100 ரன்களை எளிதாக கடக்கச் செய்தது. 19.5 ஓவர்களிலேயே இந்திய அணி 100 ரன்களை கடந்தது. அடுத்து கில் விக்கெட்டை பர்கர் வீழ்த்தினார். அடுத்து வந்த ஸ்ரேயாசை தனது அடுத்த ஓவரில் பர்கர் சாய்த்தார். ஸ்ரேயாஸ் ரன் ஏதும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார்.

அதன் பிறகு கே.எல்.ராகுல் களம் புகுந்தார். கோலியுடன் கைகோர்த்த ராகுல் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் நிதானமாக ஆடினார். வலுவான முன்னிலையை நோக்கி முன்னேறிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்திருந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

33 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்த கே.எல்.ராகுல் நிகிடி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வெர்ரேனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பிறகுதான் தென்னாப்பிரிக்காவின் மாயாஜாலம் அரங்கேறியது. ஒரே ஒரு ரன் கூட எடுக்காமல் வரிசையாக இந்திய வீரர்கள் அவுட் ஆகிக்கொண்டே இருந்தார்கள். ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் இப்படி பலியானார் என்பதுதான் ஆச்சர்யம்.

4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்த இந்திய அணி அதன் பிறகு 11 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ், ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக்அவுட் ஆயினர். ஒரு டெஸ்ட் போட்டியில் இப்படி ஒரு ரன் கூட எடுக்காமல் 6 விக்கெட் அவுட் ஆகியிருப்பது, இதுவே முதல் முறை.

நூறாண்டுக்கும் மேற்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடந்துள்ள 2,522 போட்டிகளிலும் ஒருமுறை கூட இதுபோன்று நிகழ்ந்ததே இல்லை என்பதுதான் வரலாற்று அதிசயம். இது இந்திய அணிக்கு இது மோசமான சாதனையாகு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link