வடகலை தென்கலை காட்டுமிராண்டித்தன மோதல்… அடிதடி, குஸ்தி, கொலை மிரட்டல்…!

வேலை இல்லாத வெட்டிகள், ஜாதிப்பெருமை பேசும் பழமைவாதிகள், ஆணவம் பிடித்தவர்கள் மட்டுமே தங்கள் ஜாதிப் பெருமைக்காக மல்லுக்கட்டுவார்கள் என்று விமர்சனம் செய்வோரின் வாயை அடைக்கச் செய்யும் அளவுக்கு வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே நடைபெற்ற அடிதடி விவகாரம் சந்தி சிரிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தின் பார்வேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளும் வைபவம் நடைபெறும். அதன்படி, கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலையின் மீது எழுந்தருளினார். தேவராஜ சுவாமி பார்வேட்டைக்கு […]
துபாயில் இருந்து திரும்பிய சரத்குமார்! கேப்டன் சமாதியில் அஞ்சலி!

துபாயில் இருந்து திரும்பிய நடிகர் சரத்குமார், கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கேப்டனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சென்னை தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று […]
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் மறைவு! முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் காலமானதை தொடர்ந்து அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த கு.க.செல்வம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி விடுத்துள்ளார். அதில், ‘‘வெள்ளந்தியான உள்ளத்துக்கு சொந்தக்காரர் கு.க.செல்வம் என்று கூறிய அவர், புன்சிரிப்பும், வாஞ்சையும் நிறைந்த அவரது பேச்சை இனி கேட்க முடியாது என்று எண்ணும் போது நெஞ்சம் விம்முகிறதாக தெரிவித்திருந்தார். மேலும் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு திமுகவில் தன்னை இணைத்துக் […]
தூத்துக்குடி கனமழை: கனிமொழி எம்.பி. தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

தூத்துக்குடியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று (ஜன.3) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக திருநெல்வேலி, குமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தது. வீட்டிற்குள் புகுந்த வெள்ளநீர் பொதுமக்களின் அனைத்து பொருட்களையும் நாசமடைய செய்ததுடன் பலரின் வீடுகள் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட […]
வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள்: ஓ.பன்னீர்செல்வம் மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திர போராட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களுடையது தான். அதிலும் குறிப்பாக ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து உயிர் நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரதீர சாகச செயல்கள் மக்கள் மனதில் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியது. இன்று (ஜன.3) சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய […]
கலைஞர் நூற்றாண்டு விழா இலக்கிய போட்டி: மாணவர்களுக்கு பரிசளித்த அமைச்சர் சேகர்பாபு!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு மற்றும் இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருக்கோயில்கள் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். சென்னை […]
பிரதமரை நேரில் சந்திக்கும் உதயநிதி… நிதி கேட்டு நெருக்கடி கொடுப்பாரா..?

தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜனவரி 19 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டியின் நிறைவு நாளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று டெல்லி செல்கிறார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நாளை பிரதமர் மோடியை சந்திப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்தித்து நேரில் வருவதற்கு வலியுறுத்துவார் என்று தெரிகிறது. இந்த நிலையில், இதுகுறித்து […]
கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்..?

கிளம்பாக்கத்திற்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டு, மேலதிக வேலைகள் மளமளவென நடந்துவருகின்றன. வட சென்னை மற்றும் தென் சென்னை மக்கள் அதிக சுமையுடன் ஊருக்குள் செல்லவேண்டியிருப்பதால், கடுமையான நெரிசல் ஏற்படவே வாய்ப்பு அதிகம் என்று பல்வேறு விமர்சனங்கள் இருந்துவந்தாலும், எல்லா பிரச்னைகளியும் தீர்ப்பதற்கு பணிகள் நடந்துவருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறிவருகிறார். இன்னும் 10 நாட்களுக்குள் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிடும் என்று தெரிவித்திருப்பவர், அடுத்தபடியாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இருப்பதாகத் […]
கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்..?

கிளம்பாக்கத்திற்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டு, மேலதிக வேலைகள் மளமளவென நடந்துவருகின்றன. வட சென்னை மற்றும் தென் சென்னை மக்கள் அதிக சுமையுடன் ஊருக்குள் செல்லவேண்டியிருப்பதால், கடுமையான நெரிசல் ஏற்படவே வாய்ப்பு அதிகம் என்று பல்வேறு விமர்சனங்கள் இருந்துவந்தாலும், எல்லா பிரச்னைகளியும் தீர்ப்பதற்கு பணிகள் நடந்துவருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறிவருகிறார். இன்னும் 10 நாட்களுக்குள் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிடும் என்று தெரிவித்திருப்பவர், அடுத்தபடியாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இருப்பதாகத் […]
தமிழகத்திலும் லாரி ஸ்ட்ரைக் வருகிறதா… பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு அபாயம்

மத்திய அரசு கொண்டுவதந்துள்ள புதிய கிரிமினல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராடி வருகின்றனர் மத்திய பிரதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. விபத்து ஏற்படும்போது கடுமையான இழப்பீடு 10 ஆண்டு சிறைத் தண்டனை போன்றவை அமலாக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். லாரிகள் இயக்கப்படாத காரணத்தால் பெட்ரோல் பால் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். மத்தியப்பிரதேசம் […]

