News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழக அரசுக்கு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

தமிழக அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் மாதந்தோறும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 தகுதியுள்ள மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்.15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வந்த நிலையில், […]

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு கோரப்பட்ட ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி தனக்கு நெஞ்சுவலிக்கிறது என்று சொன்னதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனது உடல்நிலையை காரணம் […]

குஷ்புவின் புகைப்படத்தை செருப்பால் அடித்து போராட்டம்! காங்கிரஸ் கட்சியினர் கைது!

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குரல் கொடுக்காதது ஏன் என்று நெட்டீசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சேரி என்ற வார்த்தைக்கு குஷ்பு அர்த்தம் […]

நீட் தேர்வு பயிற்சி மாணவர் தற்கொலை! ராஜஸ்தானில் பரபரப்பு!

நீட் தேர்வு பயிற்சி மாணவர் தோல்வி பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   ராஜஸ்தானில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் தேர்வுகளுக்கு தயாராவதற்கு நீட் தேர்வு மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதன்படி லட்சக்கணக்கான மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் போது ஒரு சிலர் அழுத்தம் மற்றும் தோல்வி பயம் காரணமாக தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து விடுகின்றனர்.   அந்த வகையில் நீட் தேரவு […]

9.13 லட்சம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பம்! தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழகத்தில் புதிதாக 9.13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்காக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார விடுமுறை நாட்களில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதுபோன்று நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் இதுவரை மொத்தம் 9.13 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை […]

சிக்கலில் குஷ்பு! பட்டியலின பெண்களின் போராட்டம் அறிவிப்பு!

குஷ்பு மன்னிப்பு கேட்கும் வரை ஓயுமாட்டோம் என்று பட்டியலினத்தைச் சேர்ந்த 500 பெண்கள் நாளை நடிகை குஷ்புவின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குரல் கொடுக்காதது ஏன் என்று நெட்டீசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சேரி என்ற […]

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை! முதலமைச்சர் திறந்து வைத்தார்!

சென்னை மாநில கல்லூரியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.   கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.   அதன்படி சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட முன்னாள் […]

பிரதமர் மோடி திருப்பதியில் சாமி தரிசனம்! வைரல் புகைப்படங்கள்!

140 கோடி மக்களின் நலன் வேண்டி பிரதமர் மோடி திருப்பதி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.     பிரதமர் மோடி தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்றிருந்த நிலையில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நேற்று (நவ.26) இரவு 7.40 மணியளவில் திருப்பதி வந்து சேர்ந்தார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை ரேணிகுண்டா விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார். […]

அமைச்சர் உதயநிதியின் 46வது பிறந்தநாள்! பெற்றோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

அமைச்சர் உதயநிதி தனது 46வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (நவ.27) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பேசினார்.   தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதே போல் முன்னாள் முதலமைச்சரும் தனது தாத்தாவுமான கருணாநிதியின் நினைவிடத்திலும் […]

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! முக்கிய தகவல்கள்!

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.   சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் அக்கார்டில் நேற்று (நவ.26) காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் முதலமைச்சர், அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் கட்சியை வலுப்படுத்துவதோடு கூட்டணியையும் உறுதி செய்வதற்கான விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.     வருகிற […]