News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் விஜயகாந்த் படங்கள்… தியேட்டரை நோக்கி படையெடுக்கும் ரசிகர்கள்

நீண்ட காலமாக உடல் நலமின்றி விஜயகாந்த் மரணம் அடைந்திருந்தார் என்றாலும், அவருக்கு சென்னையில் குவிந்த கூட்டமும் தினம் தினம் அவரது சமாதிக்கு வந்து சேரும் மக்கள் எண்ணிக்கையும் இன்னமும் குறையவே இல்லை. இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த பழைய படங்களை தூசு தட்டி திரையில் வெளியிடும் வேலைகள் ஜரூராக நடந்துவருகின்றன. இப்போதே தென் தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களில் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. வெளியூர்களில் திரையிடப்படும் படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் படையெடுத்து வருகிறார்கள். […]

லூலு மாலுக்கு போகிறதா கோயம்பேடு நிலம்..? சீமான் அதிரடி குற்றச்சாட்டு

மெரினாவில் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கப்படும் என்று தி.மு.க. அறிவித்த போதும், பரந்தூர் விமான நிலையத்துக்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சீமான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கும் எதிராக பேட்டி கொடுத்தார். சீமான் பேசுகையில், ‘’400 கோடி ரூபாயில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் வேண்டும் என்று நாங்கள் கேட்டோமா? அதற்காக போராட்டம் நடத்தினோமா? மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு நிறைய விமானங்கள் வருகிறது. அதனால் 5000 ஏக்கர் கையகப்படுத்தி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் தெருவில் […]

ராமர் கோயில் திறப்புவிழாவில் ரஜினி, இளையராஜாவுடன் துர்கா ஸ்டாலின்..?

ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோவில் திறக்கப்படுகிறது. இந்த கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 16ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை பிரமாண்டமாக நடைபெறுகிறது. இங்கு ஸ்ரீராமர் தவிர அன்னபூரணி, அனுமன், மகரிஷி வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அகஸ்தியர், நிஷாத் ராஜ், ஷப்ரி போன்ற கோவில்களும் இந்த வளாகத்தில் கட்டப்பட உள்ளன. இங்குள்ள தூண்களில் சூரியன், சிவன், பார்வதி, விநாயகர் சிலைகள் மற்றும் மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கும்பாபிஷேக விழாவிற்காக 460 கைவினைஞர்கள் […]

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா! ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் அழைப்பு!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இம்மாதம் (ஜனவரி) 22ம் தேதி நடைபெற உள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சிறப்பாக செய்து வருகிறது. மேலும் அன்று நண்பகல் 12.20 மணியளவில் கோவில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய […]

கூட்டுக்குடிநீர் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ரூ.1,933.69 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக தலைமை செயலகத்தில் இருந்த படியே சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பிலான திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அதன்படி சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 204 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் […]

மிக்ஜாம் புயல் நிவாரணப்பணி: முதலமைச்சரிடம் திருவாவடுதுறை ஆதீனம் காசோலை வழங்கினார்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நிதி வழங்கினார். கடந்த டிசம்பர் மாதம் 3  மற்றும் 4 (2023) ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரியளவில் சேதத்தை சந்தித்தது. பொது மக்களின் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ள நீர் புகுந்து அவர்களின் அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியது. இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் […]

தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ஒப்படைப்பு! அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்!

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் 2022& 23ஆம் நிதியாண்டிற்கான அரசின் பங்கு ஈவுத்தொகையாக ரூ.18 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் 2022- 23ஆம் நிதியாண்டிற்கான அரசின் பங்கு ஈவுத்தொகையாக ரூ.18 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த […]

கனிமொழி எம்.பி. பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

கனிமொழி எம்.பி. இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சரும் அவரது சகோதரருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொது செயலாளருமான கனிமொழி இன்று (ஜன.5) பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சகோதரரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தென்மாவட்டங்களை புரட்டிப் போட்ட பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். தொடர்ந்து […]

வரப்போகுது மோடியின் தேர்தல் பட்ஜெட்… பெட்ரோல் விலை குறைப்பு, ரயிலில் டிக்கெட் சலுகை உறுதி

கடந்த ஒன்பது ஆண்டுகளாக மோடி அரசாங்கம் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், நேரடியாக மக்கள் பயன்படும் வகையில் எந்த ஒரு மெகா அறிவிப்பும் செய்ததில்லை. இந்த நிலையில் இன்னும் நான்கு மாதங்களில் தேர்தலை சந்திக்கவேண்டிய சூழல் மோடிக்கு இருக்கிறது. ஆகவே, பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் ஒரு இடக்கால பட்ஜெட்டாக இருக்கும் என்றாலும் தேர்தல் […]

கனிமொழி பிறந்த நாளில் வைரலாகும் எம்.ஜி.ஆர். புகைப்படம்…  அமைதியான தி.மு.க. ஐ.டி.விங்

தென் தமிழக மக்கள் வெள்ளத்தில் இருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை என்பதால் என்னுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று கனிமொழி எம்.பி. அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், மற்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அவரது பிறந்த நாளை ஆதரவாளர்கள் வழக்கத்தைவிட அதிகமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளில் சின்னப் பிள்ளையாக எம்.ஜி.ஆர். மடியில் கனிமொழி அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு பாராட்டி வருகிறார்கள். இந்த படம் அ.தி.மு.க.வினர் மத்தியிலும் பரபரப்பாக பரப்பப்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் மழை தொடங்கிய […]