ஸ்டாலின் தோல்வி திட்டமிட்ட சீட்டிங்..? கொளத்தூர் விவிபேட் மோசடி?

ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி அடைந்த விவகாரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு மிஷின் பழுதாகியிருந்ததும், 2 வி.வி.பேட் செயல்படாததும் கண்டுபிடிக்கப்பட்டது. கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் 30 சதவீதம் முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் அம்பலமாகி உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவை விட 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் தோல்வியை தழுவினார். இதையடுத்து, […]
ரொம்ப லேட் ஸ்டாலின் அங்கிள்… காவிரியில் தண்ணீர் வந்தாச்சு.

கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. கபினி அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு அளித்துள்ளது. இம்மனுக்கள் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் அவர்களால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்குத்தான் விஜய் கட்சியினர் ஸ்டாலினை கிண்டல் செய்கிறார்கள். தவெகவினர், ‘’எங்க அண்ணன் ஆட்சியில் காவிரி […]
தோப்பு வெங்கடாசலம் அவுட். விஜய்யா… எடப்பாடியா..?

அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக வெளியேறி திமுகவில் சேர்ந்தவர் தோப்பு வெங்கடாசலம். அதிமுகவிலிருந்து வந்தவர் என்பதால், அவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பதற்காக புதிதாக ஈரோடு மத்திய மாவட்டம் என ஒரு மாவட்டத்தை தலைமை உருவாக்கி, மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், இன்று திடீரென ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட பெருந்துறை, பவானி தொகுதிகள் முறையே ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு மாவட்டத்தில் இணைக்கப்படுவதாக திமுக […]
விஜய்க்கு வில்லன் செந்தில்பாலாஜி..? சட்டசபை கூட்டத்திற்குள் ஜெயில்..?

செந்தில் பாலாஜியை எப்படியாவது ஜெயிலில் அடைக்கவேண்டும் என்று விஜய் போடும் ஒவ்வொரு திட்டத்தையும் செந்தில்பாலாஜி உடைத்துக்கொண்டே வருகிறார். இந்த விளையாட்டை முடிக்க விஜய் தயாராக இல்லையாம். இம்மாதம் சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போது அவர் சிறையில் இருக்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளதால், மீண்டும் ஒரு முயற்சி நடக்கும் என்கிறார்கள். முதலில் சட்டமன்ற உறுப்பினர் குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் மற்றும் தற்போது டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் என அடுத்தடுத்த சட்டப் போராட்டங்களில் செந்தில் […]
வசூலும் போச்சு. ரீல்ஸும் போச்சு. விஜய் காவிரி ஃப்ளாப் ஸ்டோரி

எம்.ஜி.ஆர் போன்று கர்நாடகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சமாக தண்ணீர் பெற்றுவந்தாலும் ரீல்ஸ் போட்டு இமேஜை அதிகரித்துக்கொள்ளலாம் என்று விஜய் நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார். அதோடு, கர்நாடகாவில் ஜனநாயகன் வசூல் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே காவிரி விஷயத்தில் விஜய் அமைதியாக இருந்தார். ஆனால், அதற்கும் பாதிப்பு வந்துவிட்டது. தமிழகத்தில் அத்தனை கட்சிகளும் விஜய்யின் கர்நாடகப் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், விஜய் பிடிவாதமாக இருந்தார். அதற்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ஆப்பு வைக்கும் விதமாக […]
காவிரிக்கு குரல் கொடுப்பாரா ராகுல்..? அன்புமணியுடன் மாணிக்கம்தாகூர் மோதல்

காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும், மேகதாது திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி குரல் கொடுக்க வேண்டும். அப்படி பேசினால் நான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிடுகிறேன் என்று பாமக தலைவர் அன்புமணி பேசியிருந்தார். மேலும் அன்புமணி, “அந்தமான் நிக்கோபர் தீவுகளில் சிறிய அளவில் காட்டை அழித்து உருவாக்கப்படும் ‘கிரேட் நிக்கோபர்’ என்ற மத்திய அரசின் திட்டத்தை ராகுல்காந்தி எதிர்க்கிறார். அந்த உணர்வை நான் புரிந்துக் கொள்கிறேன். அதை நான் ஏற்றும் கொள்கிறேன். […]
மின்வெட்டு, மின் கட்டணம் உயர்வு. இதுவும் தனியாருக்குப் போகிறதா விஜய் சார்?

விஜய் ஆட்சி அமைத்ததில் இருந்தே தமிழகத்தில் மின்வெட்டு நிலவி வருகிறது. அதோடு, வழக்கத்தை விட அதிகமாக மின் கட்டணம் என்றும் புகார் வருகிறது. இந்த நிலையில், மின்சாரத்தை தனியாருக்கு விஜய் ஒப்படைக்கப் போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்… முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. […]
கார் லஞ்சம் தரும் விஜயபாஸ்கர். என்ன செய்யப்போகிறார் விஜய்..?

யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று மேடையில் விஜய் தில்லாகப் பேசினார். இப்போது அவரது கட்சி நிர்வாகிகளுக்கு புதுக்கோட்டை விஜயபாஸ்கர் லஞ்சமாக கார் வாங்கித்தர இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. விஜய் கட்சியில் இணைந்ததும் மாவட்டச் செயலாளர் பதவி அல்லது அதற்கு இணையான பதவி வழங்கப்படும் என்று நினைத்தே அதிமுக மாஜிக்கள் பலர் ஓடோடி போய் இணைந்தார்கள். ஆனால், எல்லோருக்கும் விஜய் அல்வா கொடுத்துவிட்டார். இதுவரை யாருக்கும் எந்த பதவியும் கொடுக்கவில்லை. அது மட்டுமின்றி, யாருக்குமே விஜய் எந்த உறுதியும் […]
கர்நாடகாவுக்கு விஜய் குழு… எம்.ஜி.ஆர். ஸ்டைல் தண்ணீர் தருமா?

காவிரி நதி நீர் பங்கீடு, மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகம் சென்று, அங்கு முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்தித்துப் பேசவிருக்கிறார். கர்நாடகாவுக்கு விஜய்யுடன் செல்லும் பிரதிநிதிகள் குழு பற்றிய பட்டியல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் செல்கிறார்கள். மேலும், தலைமைச் செயலாளர், முதல்வரின் முதல் இரண்டு செயலாளர்கள், தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் ஜி. உமாபதி ஆகியோருடன் […]
மாணவர்களுக்கு விஜய் சிக்கன் பிரியாணி..? சத்துணவு பரபரப்பு

காமராஜர் மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தார். எம்.ஜி.ஆர். அதை சத்துணவுத் திட்டமாக மாற்றினார். கருணாநிதி அதில் முட்டை கொண்டுவந்தார். ஜெயலலிதா வெரைட்டி ரைஸ் என்று மாற்றினார். இந்த வரிசையில் மதிய உணவுக்கு பிரியாணி போடுவதற்கு விஜய் ஆலோசனை செய்வதாக கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்யும் விதமாக தமிழக அரசு பள்ளிகளில் வாரம் ஒருநாள் பிரியாணி வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார் என்றே கூறப்படுகிறது. அதேநேரம் சிக்கன் […]

