தவறான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை! முதலமைச்சர் எச்சரிக்கை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் 2 நாள் ஆலோசனை மாநாட்டில், பொய் செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்றும், நாளையும் (அக்.3 மற்றும் அக்.4) கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற […]
விக்ரம் லேண்டர் இனி செயல்படாது? விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

சந்திரயான்-3 மூலம் நிலவுக்கு செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டர் பனியில் உறைந்து போனதால் மீண்டும் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 14ம் தேதி எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது கடந்த ஆகஸ்டு மாத்ம 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் புவி மற்றும் நிலவின் வட்டப்பாதையை கடந்து விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை […]
கர்நாடகாவில் மிலாது நபி ஊர்வலத்தில் கல்வீச்சு! 40 பேர் கைது!

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் மிலாது நபி ஊர்வலத்தில் திடீரென்று கல்வீசி தாக்குதல் நடத்திய 40 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் மிலாது நபியை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம் சாந்திநகர் ராகிகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் ஊர்வலத்திற்குள் கற்களைவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் போர்க்களமான அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து […]
சிறைக்கு உள்ளே சந்திரபாபு நாயுடு! வெளியே மனைவி, மகன் உண்ணாவிரதம்!

சிறையில் இருக்கும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சிறைக்கு உள்ளேயும், வெளியே அவரது மனைவி மற்றும் மகனும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 3ம் தேதி போலீசார் கைது செய்யப்பட்டார். ராஜமுந்திரி சிறையில் […]
ஆசிய விளையாட்டு போட்டி! சக வீராங்கனை மீது சர்ச்சையை கிளப்பிய இந்திய வீராங்கனை!

ஆசிய விளையாட்டு போட்டியில் சக வீராங்கனை மீது இந்திய வீராங்கனை சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியது பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்திய அணி பதக்கங்களை வாரி குவித்து வருகிறது. அதன்படி இந்தியா இதுவரை 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை பெற்று சிலநாட்களாகவே 4வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் […]
தி.மு.க.வில் கூடுதல் சீட்டுக்கு அடிபோட்ட கே.எஸ்.அழகிரி! முக்கிய பின்னணி!

வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் கூடுதலாக சீட் கிடைக்கும் என்று கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேசிய அளவில் மட்டுமல்லாது ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல்களத்தை பரபரப்பாக்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி முறிவைத் தொடர்ந்து மத்திய பா.ஜ.க.வின் கூட்டணி யாருடன் என்ற பெரியகேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து கூடுதல் இடங்களில் போட்டியிடும் என்ற பேச்சுகளும் அடிபட்டு […]
9 தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு! முதலமைச்சர் பெருமிதம்!

9 தமிழக இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் அவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இஸ்ரோவில் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளான முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், மயில்சாமி, அண்ணாதுரை, வீரமுத்து உள்ளிட்ட 9 பேர் தமிழகத்தின் பெருமையை உலகளவில் கொண்டு சேர்த்துள்ளனர். அவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் தலைமையேற்று பேசிய முதலமைச்சர் […]
காந்தி ஜெயந்தி: முதலமைச்சர், ஆளுநர் மரியாதை மலர் தூவி மரியாதை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு அருகில் மலர்களால் சூழவைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
ரூ.1.6 லட்சம் கோடியை தாண்டிய ஜி.எஸ்.டி. வசூல்!

நடப்பு நிதியாண்டில் 4வது முறையாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.6 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக அதிகாரப் பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் அரசின் மொத்த ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வருவாய் ரூ.1,62,712 கோடியாக இருந்தது. 2023 செப்டம்பர் வருவாயுடன் கடந்த ஆண்டு இதே மாதமான செப்டம்பர் 2022 வருவாயான ரூ.1.47 லட்சம் கோடியை விட அதிகரித்துள்ளது. அதாவது 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த […]
அண்ணாமலை நாளை டெல்லி பயணம்! முக்கிய பின்னணி தகவல்கள்!

அ.தி.மு.க. கூட்டணி முடிவுக்கு பின்னர் நாளை அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளது அரசியல் களத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டி, தேசிய ஜனநாயக கட்சியில் இருந்தும் பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதேபோல் அண்ணாமலையை அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் குற்றம்சாட்டினர். இந்நிலையில் அண்ணாமலை நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். […]

