சிறார்களுக்கு செலுத்தப்பட்ட எச்.ஐ.வி. ரத்தம்! உ.பி.யில் அதிர்ச்சி!

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் இருப்பது உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் உள்ள லாலா லஜபதிராய் அரசு மருத்துவமனையில் 6 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு தலாசீமியா என்ற மரபணு நோய்க்கான சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவர்களுக்கு ரத்தம் செலுத்தப்பட்ட நிலையில், அதில் 14 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி. மற்றும் ஹெபடைடிஸ் நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது. அதில் […]
அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர்!

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாகு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வர உள்ளதால் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் பிரதான கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் […]
பங்காரு அடிகளார் மறைவு! பிரதமர் இரங்கல் கடிதம்!

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் கடிதத்தை பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் கொடுத்து அனுப்பி ஆறுதல் கூறினார். ஆதிபராக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் கடந்த 19ம் தேதி (அக்டோபர்) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மேலும் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஆதிபராசக்தி […]
டெல்லி மெட்ரோவில் முதியவர் மீது இளைஞர் தாக்குதல்! வீடியோ வைரல்!

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த முதியவரை, இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, மும்பை நகர மெட்ரோ ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் பல்வேறு அத்துமீறல்கள் நடக்கும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாவது வழக்கம். காதல் ஜோடிகளின் அத்துமீறல்கள், வன்முறை சம்பவங்கள் என வெளியாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் நெஞ்சை பதற வைத்துவிடுகிறது. இந்நிலையில் மெட்ரோ ரெயிலில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவரை இளைஞர் சரமாரியாக தாக்கிய சம்பவம் […]
உலக பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடம் பிடிக்கும்! எப்போது தெரியுமா?

வருகிற 2030ம் ஆண்டுக்குள் உலக பொருளாதார வரிசையில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக பொருளாதார வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து சீனா 2வது இடத்திலும், ஜப்பான் 3வது இடத்திலும், ஜெர்மனி 4வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் உலக பொருளாதார வரிசையில் 5வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் ஒன்று ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றை […]
என் இதயம் துடிக்கிறது- ‘தலைவர் 170’ ரஜினிகாந்த் வைரல் பதிவு!

தலைவர் 170 குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘தலைவர் 170’ திரைப்படத்தின் மூலம் அடுத்த வெற்றியை கையில் எடுத்துள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சுவாரியர், துஷாரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘தலைவர் 170’ இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான படப்பிடிப்புகள் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது வெகு […]
தலைமை தேர்தல் அதிகாரியுடன் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை!

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் அதிகாரி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வர உள்ளதால் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் பிரதான கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் […]
நடிகரான இ.கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்! முக்கிய தகவல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிகராக அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘அரிசி’ திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்கும் இரா.முத்தரசனுடன், சிசர் மனோகர், கோவி.இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன் அன்பு, ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகும் […]
இந்திய அரசு போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளதுஇந்திய அரசு போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு 38.5 டன் அளவிலான மருந்துகள் பேரிடர் நிவாரண பொருட்கள் உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை இந்திய விமானப் படைக்க சொந்தமான விமானம் மூலமாக அனுப்பியது இந்திய அரசு
‘நீட் கையெழுத்து இயக்கம்”தொடக்கம்!

கழக இளைஞரணிச் செயலாளர் , மற்றும் மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரை. நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தி.மு.கழகத்தின் இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணியின் அடுத்த கட்ட முன்னெடுப்பாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் – கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ‘நீட் விலக்கு – நம் இலக்கு’ எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை இன்று தொடங்கியுள்ளோம். எப்படி, கடந்த ஆகஸ்ட் 20 […]

