எங்களை புறக்கணித்தால் சிக்கல் ஏற்படும்! சந்திரசேகர்ராவ் எச்சரிக்கை!

தேர்தலில் எங்களை மக்கள் புறக்கணித்தால் அவர்களுக்குத் தான் சிக்கல் ஏற்படும் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வருகிற நவம்பர் மாதத்தில் மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளன. மேலும் தேர்தல் முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் 3ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க அனைத்துக் கட்சியினரும் தேர்தல்களத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர்ராவ், […]
பாரா ஆசிய விளையாட்டு போட்டி! பதக்கங்களை குவிக்கும் இந்தியா!

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்து வரும் நிலையில் மேலும் 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 5வது நாள் போட்டியில் இந்தியா பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அதன்படி பாரா ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. பெண்கள் காம்பவுண்ட் ஓபன் வில்வித்தை மற்றும் ஆண்கள் 1,500 மீட்டர் […]
மீண்டும் இணைந்த தேசிய விருது கூட்டணி! ‘‘சூர்யா 43’’ அப்டேட் உங்களுக்காக!

‘சூர்யா 43’ திரைப்படத்திற்காக தேசிய விருது கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது, நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 43’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் தேசிய விருது வாங்கிய ‘சூரரைப்போற்று’ படக்குழுவினர் இணைந்துள்ளனர். அதன்படி இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதாநாயகனாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத், விஜய் வர்மா […]
4 பேர் கொண்ட பா.ஜ.க. குழு தமிழகம் வருகை! தீவிர ஆலோசனை!

பா.ஜ.க.வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு வருகைபுரிய உள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பனையூர் இல்லம் முன்பாக நடப்பட்ட பா.ஜ.க. கொடிக் கம்பம் அகற்றப்பட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் மத்தியிலும் பற்றி எரிகிறது. இதனால் தமிழக அரசு பா.ஜ.க.வை வெறுப்புணர்வுடன் கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் ஒடுக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து […]
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடைபெறுவது வழக்கம். அதைத்தொடர்ந்து ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்று தொடங்கியுள்ளது. அதன் முன்னோட்டமாக தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மாவட்ட […]
பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் மேலும் 2 வழக்குகளில் கைது!

கொடிக்கம்பம் அகற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. கொடிக்கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு அக்கொடிக்கம்பம் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. இதற்கு பா.ஜ.க.வினர் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி. வாகனத்தை […]
பெட்ரோல் குண்டுவீச்சு: ஆளுநரின் துணை செயலாளர் காவல்துறைக்கு புகார் கடிதம்!

பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு ஆளுநரின் துணைச் செயலாளர் காவல்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடியான கருக்கா வினோத், நேற்று பிற்பகல் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத்தை கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சம்பவம் நடந்த […]
சந்திரகிரகணம்! திருப்பதி கோவில் 8 மணிநேரம் மூடப்படும்!

சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் 8 மணிநேரம் மூடப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகிற 29ம் தேதி சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியிருப்பதாவது:- வருகிற 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.22 மணிக்கு சந்திரகிரகணம் நிறைவடைய உள்ளது. கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாகவே கோவில் கதவுகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 28ம் தேதி (சனிக்கிழமை) இரவு 7.05 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் […]
நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வருகிற நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் முகாம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிக்கையில் கூறியுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி சத்யரபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தமிழகம் முழுவதும் நாளை (அக்.27) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இதில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக உரிய விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வருகிற டிசம்பர் 9ம் தேதி […]
ரஜினியுடன் பணிபுரிவது எனக்கு கிடைத்த பெருமை! அமிதாப் நெகிழ்ச்சி!

ரஜினிகாந்துடன் பணிபுரிவது எனக்கு கிடைத்த மரியாதை என்று நடிகர் அமிதாப்பச்சன் நெகிழ்ச்சியுடன் இணையத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத்பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘தலைவர் 170’. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தை ‘ஜெய்பீம்’ திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். நேற்று (அக்.25) நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சனுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து […]

