News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தன் சோகத்தை மறைத்துக்கொண்டு, மயானத்தில் கண்ணீர் மல்க நன்றி கூறிய சைதை துரைசாமி..!

பெற்ற பிள்ளையின் மரணத்தை பார்ப்பதே, பெற்றோருக்கு மிகக்கொடிய துன்பம் தரக்கூடியது என்பார்கள். அத்தகைய பரிதாபத்துக்கு ஆளாகியிருக்கிறார் மனிதநேய அறக்கட்டளை தலைவரும் முன்னாள் சென்னை மேயருமான சைதை துரைசாமி. இந்த நிலையிலும் தனக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்களுக்கு நன்றி கூறி நெகிழ வைத்திருக்கிறார். இமாசல பிரதேசத்தில் அவரது மகன் வெற்றி விபத்தில் சிக்கி எட்டு நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு உடல் கண்டு பிடிக்கப்பட்டது. வெற்றியின் உடலுக்கு தமிழகத்திலுள்ள அத்தனை முக்கியப் பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். […]

1,448 சிறுமிகளுக்கு பிரசவம் பார்த்தது தான் திராவிட மாடலா..? போட்டுத் தாக்கும் பா.ஜ.க.வின் நாராயணன் திருப்பதி

தமிழக பா.ஜ.க. துணைத்தலைவரான நாராயணன் திருப்பதி, நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் அதிர்ச்சிகர சம்பவங்களை வெளிப்படுத்தி, தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2021 முதல், அக்டோபர் 2023 வரையிலான 34 மாதங்களில் 18 வயதுக்கும் குறைவான பெண்கள் 1448 குழந்தைகளை பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தி குலை நடுங்க செய்கிறது. இதில் 1101 பிரசவங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்றதாக சொல்லப்படுவது கொடூரமான உண்மை. 347 குழந்தைகள் பிறந்தது […]

போதை விழிப்புணர்வுக்கு காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நடத்தும் குதிரையேற்றப் போட்டி..! கை கொடுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை குதிரைப்படை கடந்த 1780ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் வில்லியம் லாங்கனால் தொடங்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. பின்னர் 1800ம் ஆண்டு முதல் இந்த படையில் உள்ள குதிரைகள் சென்னை காவல் கண்கானிப்பாளர் வால்டர் கிராண்ட் மூலம் சென்னை காவல் துறைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்பிறகு 1926ம் ஆண்டு முதல் சென்னை காவல் குதிரைப்படை ஒரு சார்ஜண்ட் தலைமையில் ஒரு தனிப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு, சென்னை காவல் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு […]

ரஜினி படத்துக்கு இந்த பரிதாப நிலையா..? மணிகண்டன் ஓவர்டேக் பண்ணிட்டாரே…

ரஜினிகாந்த் கேமியோ ரோல் என்றாலும் கிட்டத்தட்ட ரஜினி படம் போலவே லால் சலாம் படத்துக்கு புரமோஷன் செய்யப்பட்டன. எக்கச்சக்க பில்டப் கொடுக்கப்பட்டன. சங்கி இல்லை, என் அப்பாவுக்கு எல்லா மதமும் ஒன்று தான் என்று இயக்குனரும் ரஜினியும் மகளுமான ஐஸ்வர்யா முன்கூட்டியே சமாதானக் கொடி வீசியிருந்தார். ஆனால், எதுவுமே தியேட்டரில் செல்லுபடியாகவில்லை. ரஜினியின் கேரக்டர் அதிரடியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதே தவிர, கதையோட்டத்தில் செட் ஆகவில்லை, யாருடைய நெஞ்சையும் தொடவில்லை. அதனால் படத்துக்கு கலெக்‌ஷன் சுத்தமாக குறைந்துவிட்டது என்கிறார்கள். முதல் […]

இளம் பெண்ணுக்கு காஸ்ட்லி பரிசு காட்டி மேட்ரிமோனியல் மெகா மோசடி… நைஜீரிய கிரிமினல்களை கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீஸ்

திருமண ஆசை காட்டி நூதன முறையில் கே.கே.நகர் இளம் பெண்ணிடம் 2.87 கோடி ரூபாய் சீட்டிங் செய்த நைஜீரியர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீர் ராய் ரத்தோர் தலைமையிலான டீம் கைது செய்து சாதனை படைத்திருக்கிறது.   சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மேட்ரிமோனியல் இணையதளத்தில் திருமணத்திற்காகப் பதிவு செய்திருக்கிறார். அவரை வெளிநாட்டில் இருந்து தொடர்புகொண்ட அலெக்சாண்டர் சான்சீவ் என்பவர், திருமணம் செய்துகொள்ள விருப்பம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இருவரும் தொடர்ந்து வாட்ஸ் ஆப் […]

சட்டமன்றத்தில் சம்பவம் செய்த சபாநாயகர் அப்பாவு… தெறித்து ஓடிய கவர்னர் ஆர்.என்.ரவி

கடந்த சட்டமன்றத் தொடரில் ஆரம்பத்திலேயே எழுந்து ஓடிய ரவி, இந்த முறை சபாநாயகர் அப்பாவு பேசியதைக் கேட்டு அதிர்ந்து எழுந்து வெளியே பதறி ஓடியிருக்கிறார். இன்று சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கிய நேரத்தில், தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறி அரசின் உரையை புறக்கணித்தார். இதையடுத்து ஆளுநரின் உரையை அப்பாவு பேசினார். அப்போது, ஆளுநரை பக்கத்தில் வைத்துக்கொண்டே பல்வேறு விஷயங்களைப் பேசி அதிர வைத்தார். தமிழகத்தில் இவ்வளவு பெரிய […]

சூர்யாவை ஏமாற்றினாரா வெற்றிமாறன்..? வாடிவாசலில் நுழைகிறார் தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட, ‘வாடிவாசல்’ படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவியது. சூர்யா இந்த படத்துக்காக நிறையவே ஹோம் ஒர்க் செய்து வந்தார். ஜல்லிக்கட்டு கதை என்பதால் மாடுகளுடன் பழகி, மாடு பிடிப்பவர்களுடன் கலந்து பேசிவந்தார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய தருணத்திலிருந்தே நிறைய பிரச்னைகள் வந்தன. வெற்றிமாறன் மேக்கிங் ஸ்டைலுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் ஏனோ சரிப்பட்டு வரவில்லை. அதனால், சூட்டிங்கில் சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் நிகழ்ந்தன. இந்த நேரத்தில் தான் திடீரென இந்த பிராஜெக்ட்டில் அமீரை […]

சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆவேச மோதல்… உரை புறக்கணிப்பு

கடந்த சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி இந்த ஆண்டு தமிழக அரசு தயாரித்த உரையை படிக்காமல் புறக்கணிப்பு செய்திருக்கிறார். இன்ற் சரியாக 10 மணிக்கு ஆளுநர் உரை தொடங்கியது.  தமிழில் பேசத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி,  “தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும். அந்த மரபு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது” என்று இரண்டே நிமிடத்தில் தன்னுடைய உரையை முடித்துக்கொண்டார். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு அந்த உரையை வாசித்தார். தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் […]

10 லட்சம் பூக்களுடன் மலர்க் கண்காட்சி… சென்னை மக்களுக்கு குஷியோ குஷி

வழக்கமாக குளிர் பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் மட்டுமே மலர்க் கண்காட்சிகள் நடத்தப்படும். இதனை எல்லோரும் பார்த்து ரசிக்க வாய்ப்பு இருக்காது. எனவே, அப்படியொரு மலர்க் கண்காட்சி சென்னையில் நடந்தால் எப்படியிருக்கும் என்று பரிசோதனை முயற்சியாக கடந்த ஜூன் மாதம் ஒரு மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டது. அதற்கு நிறைய வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த ஆண்டு சென்னை செம்மொழி பூங்காவில் மலர்க் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் […]

சீமானுக்கு என்.ஐ.ஏ. சம்மன்..? திட்டமிட்டு சீமானை மாட்டிவிட்ட சாட்டை துரைமுருகன்

என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘நாங்கள் என்ன செய்தாலும் அது சீமானுக்குத் தெரியும், அவரது முழு கட்டுப்பாட்டில் இருக்கிறோம், அவரது கட்டளைப்படியே செயல்படுகிறோம்’ என்று சொல்லி சீமானை அவரது நிர்வாகிகள் மாட்டிவிட்டதாக செய்திகள் கசிகின்றன. கடந்த 2ம் தேதி தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், கோவை ரஞ்சித், இசை மதிவாணன், பாலாஜி, முருகன் ஆகியோரது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் லேப்டாப், செல்போன்கள், […]