News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஜய்க்கு ரசிகர்கள் கோரிக்கை… பெயர் திருத்தம் போதாது… அப்பாவைக் கொண்டுவாங்க…

இந்த உலகிலேயே ஒரே ஒரு அறிக்கை மட்டும் கொடுத்து கட்சி தொடங்கிய முதல் நபர் நடிகர் விஜய் மட்டும் தான். அவரது தமிழக வெற்றி கழகம் பெயரில் தவறு இருக்கிறது, க் சேர்க்க வேண்டும் என்று பலரும் சொல்லிவந்தார்கள். இத்தனை நாளும் அமைதியாக இருந்த விஜய் திடீரென, க் சேர்க்கச் சொல்லிவிட்டார். எனவே இனி விஜய் கட்சி தமிழக வெற்றிக் கழகம் என்று அழைக்கப்படுமாம். ஆனால், அவரது ரசிகர்கள் கோரிக்கை வேறாக இருக்கிறது. ‘கட்சி விவகாரம் பேசுவதற்கும் […]

அதுக்குள்ள கனிமொழி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிட்டாங்க… தி.மு.க. செம ஸ்பீடு

கூட்டணிக்கு யாராவது கிடைப்பார்களா என்று அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் ஆள் தேடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் தி.மு.க.விலோ தேர்தல் பிரசாரத்தையே தொடங்கிவிட்டார்கள். மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக மூன்று நாட்களுக்கு பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்தவகையில் நேற்று நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, கடலூர், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் பொதுக்கூட்டம் […]

வன்னியரசுக்கு எம்.பி. சீட்…? விடுதலை சிறுத்தைக்குள் ஆதவ் அர்ஜூனுக்கு எதிராக போர்க்கொடி..

கட்சி ஆரம்பிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் திருமாவளவன் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் வந்ததில்லை. அந்த நிலையில் இப்போது முதன்முறையாக பணத்துக்கு ஆசைப்பட்டு நேற்று கட்சிக்கு வந்த ஒரு நபருக்கு மிகப்பெரிய பதவியைக் கொடுத்து இத்தனை ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் வன்னியரசுவை அவமானப்படுத்திவிட்டதாக நிர்வாகிகள் கொதிக்கிறார்கள். பணம் இருந்தால் சீட்டு வாங்கிவிடலாம் என்ற லட்சியத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் ஆதவ் அர்ஜூன் நுழைந்திருக்கிறார், அவருக்காக கள்ளக்குறிச்சி தொகுதியை திருமாவளவன் கேட்டு வாங்குகிறார் என்பதையே குற்றச்சாட்டாக […]

விவசாயிகளுக்கு எதிரா சட்டசபையில் பொய் சொல்லாதீங்க… தி.மு.க.வுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எச்சரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு 99% உழவர்கள் ஆதரவு என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியிருப்பது பொய் என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 3 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. 11 கிராமங்களில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்களின் நிலங்கள் இதற்காக பறிக்கப்படவுள்ளன. இதைக் கண்டித்து 90% உழவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரமாக திகழும் […]

10 கோடி ரூபாய்க்கு எம்.பி. சீட் விற்பனை செய்தாரா திருமாவளவன்? ஆதவ் அர்ஜூன் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழுவில் ஆதவ் அர்ஜூனை  துணைப்பொதுச் செயலாளராக திருமாவளவன் நியமனம் செய்திருக்கிறார். 10 கோடி ரூபாய்க்கு எம்.பி. சீட் விற்பனை செய்துவிட்டதாக திருமாவளவன் மீது சிறுத்தைகள் கோபத்தைக் காட்டி வருகிறார்கள். . லாட்டரி சீட் விற்பனையாளர் மார்ட்டினின் மருமகனே ஆதவ் அர்ஜுனா. இவர் கடந்த 27.1.2024 அன்று தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையவே செய்தார். அப்படி இணைந்தவருக்கு ஒரு மாதம் ஆவதற்கு முன்னரே 15.2.22024 அன்று நேரடியாக துணை பொதுச் செயலாளராக பதவி கிடைத்திருக்கிறது. […]

திருச்சி வேட்பாளர் துரை வைகோ.?. திருநாவுக்கரசருக்கு சீட் காலி

தி.மு.க.வில் எந்தக் கட்சிக்கு எந்த தொகுதி என்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. அந்த வகையில் வைகோவின் ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பாக ஈரோடு தொகுதியில் கணேச மூர்த்தி போட்டியிட்டார். இந்த தொகுதியில் கணேசமூர்த்திக்கு கடுமையான எதிர்ப்பு இருப்பதால், அவருக்கு சீட் இல்லை என்று தி.மு.க. முடிவு செய்திருக்கிறது. எனவே, இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதற்கு தி.மு.க. முடிவு செய்திருக்கிறதாம். அதேநேரம், […]

தேர்தல் பத்திரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை… பா.ஜ.க.வின் விஞ்ஞான ஊழல் வெளிவருமா..?

பா.ஜ.க. அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் தேர்தல் பத்திர நன்கொடைக்காக் கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வகையில் கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நிதியும் கொடுக்க முடியும். அப்படி வழங்கப்படும் நிதி எவ்வளவு என்றும் எந்த நிறுவனம் வழங்கியது […]

எல்.முருகனைத் தொடர்ந்து தமிழிசை, குஷ்பு தப்பியோட்டம்.. அண்ணாமலையின் வேட்பாளர் வேட்டை தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பா.ஜ.க. வேட்பாளராக நிற்பதற்கு பெரிய போட்டியே நிலவியது. ஆனால், வரும் 2024 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் கூட்டணி வைக்கப்போவது உறுதியில்லை என்று தெரியவந்ததும், அத்தனை முக்கியப் புள்ளிகளும் வேட்பாளராக விரும்பாமல் தப்பியோடுவதாகத் தெரிகிறது. நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவுக்கு எதிராக எல்.முருகன் நிறுத்தப்படுவார் என்று கூறப்பட்டது. எனவே, எல்.முருகனுக்கு தேர்தல் வேலைகளும் தொடங்கி நடந்துவந்தன. ஆனால், எடப்பாடி பழனிசாமி கூட்டணி இல்லை என்றதும் தோல்வி நிச்சயம் என்பதால் தேர்தலில் நிற்பதற்கு எல்.முருகன் […]

கமலஹாசனுக்கு எதிராக தேர்தலில் நிறுத்தப்படுகிறாரா கெளதமி..? அ.தி.மு.க.வில் இணைந்த மர்மம்

தேர்தல் நேரம் நெருங்கும்போது கட்சி தாவல் நடப்பது சகஜமே. ஆனால், பா.ஜ.க.வில் இருந்து நடிகை கெளதமி எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்திருப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட நடிகை கெளதமி ஆர்வமாக இருந்தார். பூர்வாங்க வேலைகளும் தொடங்கியிருந்தார். ஆனால், ராஜேந்திரபாலாஜி காரணமாக கெளதமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்தே, பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் தனது நிலத்தை விற்று பண மோசடி செய்துவிட்டதாக அவர் வெளிப்படையாகப் புகார் தெரிவித்திருந்தார். ஆனால், கட்சி […]

ஏழு நாட்களில் 21 போதைக் குற்றவாளிகள் கைது..! காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு போட்டிருந்தார். இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 7.2.20224 முதல் 13.2.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 52 கிலோ […]