நட்டா வரும் நேரத்தில் குட்டையைக் குழப்பும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

தமிழக பா.ஜ.க.வின் அரசியல் மையக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சென்னைக்கு வருகை தரும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளிப்படையாக குற்றம் சாட்டியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வின் அசைக்க முடியாத கூட்டாளியாக இருந்தவர் புதிய தமிழகத்தின் கிருஷ்ணசாமி. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தன்னுடைய […]
தமிழக முதல்வர் விஜய்… புதுவை முதல்வர் புஸ்ஸி ஆனந்த்..? புஸ்ஸியின் கேரள மாந்திரீக வில்லங்க பிளாஸ்பேக்

நடிகர் விஜய்க்கும் அவரது கட்சி நிர்வாகிகள், ரசிகர்களுக்கு மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் இடையில் நந்தி போன்று நிற்பவர் புஸ்ஸி ஆனந்த். யார் இந்த புஸ்ஸி ஆனந்த் என்று விசாரித்தால் எக்கச்சக்க வில்லங்க விவகாரங்கள் வந்து கொட்டுகின்றன. முதலில் அவர் பெயருக்கு முன்னே இருக்கும் புஸ்ஸி பற்றி பார்க்கலாம். புதுவையில் சுமார் 5,000 ஓட்டுகள் உள்ள சிறிய சட்டமன்றத் தொகுதி தான் ‘புஸ்ஸி தெரு’. இந்த தொகுதியில் புதுச்சேரி கண்ணன் தொடங்கிய புதுவை மாநில காங்கிரஸ் சார்பில், 2006-ம் ஆண்டு […]
விஜய்யுடன் மோதும் வேல்முருகன்..? யாருக்கு கிடைக்கும் டிவிகே..?

தமிழக வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார் தி.வேல்முருகன். இவர் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாக இடம் பிடித்து சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். இவரது தமிழக வாழ்வுரிமைக் கட்சியை ஆங்கிலத்தில் டிவிகே என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இப்போது விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றி கழகத்தையும் டிவிகே என்றே பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் வேல்முருகன்ன், ‘நடிகர் விஜய் தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை ஆங்கிலத்தில் டிவிகே என்று […]
ரஜினியின் லால் சலாம் படம் எப்படி இருக்குது…? எக்ஸ்பிரஸ் விமர்சனம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோவாக நடித்திருக்கும் லால் சலாம்திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் கேமியோவாக நடிக்கிறார் என்றாலும் படம் எப்படி என்று நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் ஹீரோவாக நடித்துள்ளனர். மும்பை ரிட்டர்ன்ஸ் கேங்ஸ்டர் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினி நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் மொத்தமே 20 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருகிறார் என்றாலும் தெறிக்கவிடுகிறார் என்று அவரது ரசிகர்கள் படத்தை பாராட்டித் தள்ளியுள்ளனர். குறிப்பாக, ரஜினி […]
தமிழகத்தில் ஸ்டாலின் டாப்பு… இந்தியாவில் மோடி ஸ்ட்ராங்க்… கருத்துக்கணிப்பில் சீமான் நிலை என்ன..?

நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக கிட்டத்தட்ட 25 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கியிருக்கின்றன. இத்தனை கட்சிகள் சேர்ந்தும் மோடியை வீழ்த்துவது சிரமம் என்பதையே சமீபத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றன. ‛மூட் ஆப் தி நேஷன்’ என்ற தலைப்பில் ‛இந்தியா டுடே’ மற்றும் ‛ சி வோட்டர்ஸ்’ இணைந்து நாடு முழுவதும் 35,801 பேரிடம் கருத்து கேட்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பா.ஜ.க. தனித்து 304 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சி […]
மீண்டும் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு… அப்படின்னா இந்த முறையும் ஜாமீன் கிடைக்காதா..?

இந்த வாரம் செந்தில்பாலாஜி மீது ஜாமீன் மீது நடைபெறும் நேரத்தில் அவருக்கு எதிராக சரியான வாதங்கள் வைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், அவரை ஜாமீனில் விடுவிக்க வாய்ப்பு அதிகம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த முறை தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பு இல்லை.. சி.ஆர்.பி.எஃப். படை வீரர்கள் இல்லை. தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்கள் இல்லை. இதற்குப் பதிலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலர் மட்டும் […]
தமிழகத்தில் புதுமையான அல்வா போராட்டம்… தி.மு.க.வின் கிண்டலுக்கு பாயும் பா.ஜ.க.

உரிய நிதி வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். தமிழ்நாடு கொடுக்கும் 1 ரூபாயிலிருந்து 26 பைசா மட்டுமே கொடுக்கிறார்கள். கர்நாடகாவிற்கு 16 பைசாவும் தெலுங்கானாவுக்கு 40 பைசாவும், கேரளாவுக்கு 62 பைசாவும் ஆந்திராவுக்கு 50 பைசாவுக் கொடுக்கிறார்கள். அதேநேரம் 1 ரூபாய் கொடுக்கும் மத்திய பிரதேசத்துக்கு 1ரூபாய் 70 காசும், […]
அண்ணாமலை கையில் 40 வேட்பாளர்கள் பட்டியல்..! அமித் ஷா அனுமதி கொடுப்பாரா..?

தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அமித் ஷா அறிவித்திருக்கிறார். ஆனால் எடப்பாடியோ, ‘இப்படி ஒரு பேட்டியை நான் பார்க்கவே இல்லை’ என்று நழுவுகிறார். ஆக, பா.ஜ.க. கூட்டணியில் சேரும் விருப்பம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்றே தெரியவருகிறது. இப்படி ஒரு சூழலை கணக்கிட்டு அண்ணாமலை 40 தொகுதிகளுக்கும் ஒரு உத்தேச பட்டியல் தயார் செய்திருக்கிறார். அண்ணாமலை கணக்குப்படி தமிழகத்தில் பா.ஜ.க. 17 தொகுதிகளில் போட்டியிடுகிரது. அடுத்தபடியாக ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 […]
சைபர் கிரைம் பண மோசடிக்கு 1930க்கு போன் செய்யுங்க… சென்னை போலீஸ் எச்சரிக்கை

இப்போது யாரும் மணி பர்ஸில் பணம் வைப்பதில்லை, அதனால் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சீட்டிங் செய்து பணம் சம்பாதிப்பவர்கள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் பிறரை சுரண்டுவதற்கு அதிநவீன யுக்திகளை பலரும் கையாள்கிறார்கள். மூத்த அரசு அதிகாரிகள், தனிநபர் போன்று போலியாக சுயவிபரங்களை, அடையாள அட்டையை உருவாக்கிக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த மோசடிகள் பெரும்பாலும் சமூக ஊடக கணக்குகள் அல்லது தனிநபர்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் பிற […]
கேப்டனுக்கு கோயில்… மாவட்டம் தோறும் சிலை. அண்ணியார் பிரேமலதாவுக்கு முழு அதிகாரம் – தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்ட தீர்மானங்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் பலத்தைக் காட்டுவதற்கும் விஜயகாந்த் மறைவு அனுதாப ஓட்டுகளை வாங்கவும் தே.மு.தி.க. தீவிரம் காட்டி வருகிறது. கூட்டணிப் பேச்சுகள் விறுவிறுப்படைந்திருக்கும் நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கேப்டன் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தும், அஞ்சலிக்கு திரண்டுவந்த அரசியல் மற்றும் சினிமா கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவித்த மோடிக்கு நன்றி […]

