நெல்லை கல் குவாரி 700 கோடி ரூபாய் ஊழலுக்கு சீமான் போர்க்கொடி

திருநெல்வேலி மாவட்டத்தின் கல் குவாரிகளில் தமிழ்நாடு அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் 700 கோடி ரூபாய் ஊழலை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவந்துள்ளது அறப்போர் இயக்கம். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வள வேட்டையைத் தொடரப்போகிறது திமுக அரசு? திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் கல் குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டப் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனராக இருந்த திரு நிர்மல்ராஜ் IAS, முறைகேடாக இயங்கிய (54 குவாரிகளில் 53 குவாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட 281 சதவீதம் அதிகமாக, சட்ட விரோதமாக […]
பிரதமர் மோடியை சந்திக்கும் பன்னீர், தினகரன் மற்றும் திருநாவுக்கரசர்..? அண்ணாமலை தீவிர வேட்டை

பாரதப் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கவிருக்கும் என் மண் என் மக்கள் பயணத்தின் நிறைவு நாள் விழா, வரும் பிப்ரவரி 27 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவிருக்கிறது. மாநாட்டுத் திடலை பார்வையிட்ட அண்ணாமலை, விழாவில் மோடி முன்னிலையில் வி.ஐ.பி.களை இணைப்பதற்கு அதி தீவிரமாக வேட்டை நடத்திவருகிறார். இந்த மீட்டிங்கில் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்கு அண்ணாமலை முயற்சி செய்துவந்தாலும் இதுவரை பா.ம.க., த.மா.கா., தே.மு.தி.க. ஆகிய எவையுமே முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கின்றன. காரணம் பா.ம.க, த.மா.கா ஆகிய கட்சிகள் […]
காவலரின் மனிதாபிமானத்துக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு

காவல் துறைக்கு சல்யூட் அடிக்கும் வகையில் அவ்வப்போது சில நல்ல செயல்கள் அரங்கேறுகின்றன. அப்படி ஒரு செயலை செய்திருக்கும் ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவைச் சேர்ந்த இரண்டாம் நிலைக்காவலர் பி.விக்னேஷ் பாண்டி என்ப்வர் என் 2 காசிமேடு காவல் நிலைய சுற்றுக் காவல் வாகனத்தின் ஓட்டுனராகப் பணிபுரிந்து வருகிறார். விக்னேஷ் பாண்டி, கடந்த 20.02.2024 […]
மதுரையில் விஜய் கட்சியின் முதல் மாநாடு..! ஏப்ரலுக்கு ரெடி போஸ்டரை அடி

அரசியல் சென்டிமென்ட் வகையில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த், கமல்ஹாசன் என்று அத்தனை பேரும் முக்கியமான நிகழ்ச்சிகளை மதுரையில் தொடங்குவார்கள். இதே பாணியில் நடிகர் விஜய்யும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் தொடங்க இருக்கிறாராம். ஏப்ரல் மாத இறுதியில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் அதற்குள் முடிந்துவிடும் என்று கணக்குப் போட்டே ஏப்ரல் இறுதி என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். எனவே, நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, இந்த […]
அண்ணாமலைக்கு பிரதமர் மோடி கடைசி வாய்ப்பு… தமிழக பயணத்தில் பிரேமலதா சந்திப்பு.?

தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அண்ணாமலை தினமும் கூறிவருகிறார் என்றாலும் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. சமீபத்தில் சுதீஷை விமானப் பயணத்தில் அண்ணாமலை சந்தித்துப் பேசியதை அடுத்து, பிரதமர் பயணத்தின் போது பிரேமலதா மேடை ஏற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு டெல்லி கொடுக்கும் கடைசி வாய்ப்பாக பிரதமர் வருகை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன்படி 2 நாட்கள் தமிழகத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். அதன்படி, வரும் 27ம் தேதி மதியம் […]
எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க. ஆதரவு உறுதி..? மம்தா கட்சியுடன் தேர்தல் கூட்டணி குளறுபடி

தினமும் ஏதேனும் ஒரு கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின்றன. அந்த வகையில் மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் விவகாரத்தில் நிறைய வில்லங்கம் வெளிவந்துள்ளன. திருணாமுல் காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் கலைவாணன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு திருணாமுல் காங்கிரஸின் தமிழ் மாநில பிரிவு முழு ஆதரவை தெரிவிப்பதாக ஆதரவு கடிதத்தை தன்னுடைய மாநில நிர்வாகிகளுடன் வழங்கினார். […]
28 கிரிமினல்களை குண்டர் சட்டத்தில் போட்ட சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்… அலறி ஓடும் கஞ்சா பார்ட்டிகள்

போதைக்கு கஞ்சா மட்டுமின்றி வலி நிவாரண மாத்திரைகளையும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அனைத்து வகையிலான கஞ்சா மற்றும் போதை குற்றவாளிகளையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையிலான டீம் கைது செய்து அதிரடி காட்டியுள்ளது. புதுப்புது வழிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை சென்னை பெருநகரில் உலவவிடும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யுமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், […]
அரசு நிலங்களை தனியாருக்கு கொடுத்து கோடிகளில் மோசடி..? தில்லுமுல்லு அதிகாரிகளைக் கண்டுபிடிக்க விசாரணைக் குழுக்கள்

அரசுக்கு சொந்தமான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, பதிவுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் சிலரின் துணையோடு, தனி நபர்களுக்குப் பெயர் மாற்றம் செய்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதாக அரசுக்கு புகார்கள் தொடர்ந்து வருகின்றன. இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய அரசு விசாரணைக் குழு அமைத்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் தனி நபர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அதன் அடிப்படையில் அரசு நிலம் முறைகேடாக பதிவு செய்து ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதோடு, முறைகேடான […]
தேர்தலில் நிற்காமலே எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்…? மக்கள் நீதி மய்யம் 7ம் ஆண்டில் தி.மு.க.வுடன் டீல் ஓவர்

இன்று மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு ஏழாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்காமலே கமல்ஹாசன் எம்.பி.ஆகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்லன. ஏழாம் ஆண்டு குறித்து கமல்ஹாசன், ‘கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகியகாலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோசிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம். மக்களுக்கு அவர்களுடையகடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது.ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் […]
உயிருக்கு அஞ்சாமல் டெல்லிக்குப் படையெடுக்கும் விவசாயிகள்.. கலவர எச்சரிக்கை

விவசாயப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, டெல்லி நோக்கி விவசாயிகள் செல்வதற்குத் தயாராகிறார்கள். பஞ்சாப் – ஹரியாணாவை ஒட்டிய ஷாம்பு எல்லையில் 14 ஆயிரம் விவசாயிகள் 1200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களுடன் குவிந்துள்ளனர். கடந்தமுறை டெல்லியை நோக்கி […]

