உதயமாகிறது அ.தி.முக. (ஓ.பி.எஸ்.), எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் இரட்டை இலை சிக்கல்

அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வெளியானது. அதாவது, அ.தி.மு.க.வின் பெயர், கட்சி, கொடி, இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் பயன்படுத்த நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறிய பன்னீர்செல்வத்துக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. […]
திருமாவின் டெல்லி விசிட்டில் ஆதவ் அர்ஜூனன்..! ரவிக்குமாருக்கு அம்புட்டுத்தான்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் திடீரென நுழைந்து துணை பொதுச்செயலாளராக பதவி உயர்வு பெற்றிருக்கும் ஆதவ் அர்ஜூனனுக்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் நிலவி வந்தாலும், அவரை எம்.பி. பதவிக்கு நிறுத்துவது உறுதி என்பது போன்று திருமாவின் டெல்லி விசிட் நடந்திருக்கிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாட்டைக் கடிதமாக எழுதி அதனை முன்னாள் குடியரசுத் தலைவரும், இத்திட்டத்தை ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவருமான ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து திருமாவளவன் வழங்கினார். இந்த […]
விஜய் ரசிகர்களுக்கு இது செய்யணும் என்பது கூட தெரியாதா..? 20 பேர் மீது வழக்குப் பதிவு

தமிழக வெற்றிக் கழகம் என்று அறிக்கை மூலம் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம். இதையடுத்து ஊர் முழுவதும் கொடி ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவு போட்டிருக்கிறார்கள். இதையடுத்து உளுந்தூர் பேட்டையில் கொடி ஏற்றி விட்டார்கள். ஆனால் கிராமங்களில் கொடியேற்றுவதற்கு வருவாய்த்துறை, காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்ட த.வெ.க. கொடிக் கம்பங்களை போலீசார் அகற்றியதால் பரபரப்பு நிலவியது. இப்படி அனுமதியின்றி கட்சிக் கொடி ஏற்றியதாக […]
கூவத்தூர் கும்மாளத்திற்கு நடிகை த்ரிஷாவை கூட்டிச் சென்றாரா கருணாஸ்..? எடப்பாடி டீமுக்குள் கசமுசா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூவத்தூரில் நடிகைகளை எல்லாம் கூட்டி வந்து, எம்.எல்.ஏக்களை வைத்து கும்மாளம் அடித்தார் என்கிறார் ஏ.வி ராஜூ. இவர் சேலம் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். இவருக்கும் சேலம் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்துக்கும் இடையிலான மோதல் காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதன்படி, மாநகர மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்துக்கு 1,000 கோடி ரூபாய் சொத்து இருப்பதைப் பார்க்கும்போது, அவர் எடப்பாடி பழனிசாமிக்கு பினாமியாக இருப்பார் […]
அடேங்கப்பா… செல்வப்பெருந்தகை இத்தனை கட்சி மாறியிருக்காரா..? இந்த விஷயம் ராகுலுக்குத் தெரியுமா..?

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக வந்திருக்கிறார் செல்வப்பெருந்தகை. பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த தலைவர்கள் இப்போது செல்வப்பெருந்தகை மீது வழக்கம் போல் புகார் கடிதங்கள் அனுப்பத் தொடங்கிவிட்டனர். அதில் முக்கியமானது என்ன தெரியுமா..? அவர் ஏராளமான கட்சிகள் மாறியிருக்கிறார் என்பதுதான். முதன்முதலாக பூவை மூர்த்தியார் கட்சியில் இணைந்து பணியாற்றினார். அதன் பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கட்சியில் சேர்ந்தார். அங்கேயும் ஜாதி பஞ்சாயத்து […]
நடிகர் விஜய்யின் முதல் அரசியல் கூட்டத்தில் என்ன ஸ்பெஷல்..?

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை பனையூர் தலைமை நிலைய செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்கள் பங்கேற்றார்கள். கலந்துகொண்டனர். கட்சி தொடங்கப்பட்ட பிறகு விஜய் நடத்தும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் முதலில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். அந்த உறுதிமொழியில், ’நம் நாட்டின் விடுதலைக்காகவும், நமது […]
மாணவர்களுக்கும் 1,000 ரூபாய்… மூன்றாம் பாலினத்தவர், ஆட்டிசம் பிள்ளைகளுக்கு ஸ்பெஷல்… அடடே ஆச்சர்ய பட்ஜெட்

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் இன்றைய தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதே சமூகநீதி என்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய சில திட்டங்களை பார்க்கலாம். மதி இறுக்கம் எனப்படும் ஆட்டிசம் குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதல் மையம், பள்ளிகள் கிடையாது. இந்த குறையை தீர்க்கும் வகையில் 25 கோடி ரூபாயில் உயர்திறன் மையம் அமைக்கப்படுகிறது. பழங்குடியின மாணவர்கள் 1,000 பேருக்குத் திறன் பயிற்சி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 7.5% உள் ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் […]
கிராமங்களுக்கும் ரோடு, மீண்டும் சிங்காரச்சென்னை, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – தி.மு.க.வின் அதிரடி தேர்தல் பட்ஜெட்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் நேற்றைய தினமே தமிழ்நாடு பட்ஜெட்டிற்கான முத்திரை சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில், “தடைகளை தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. அதோடு, ‘மாபெரும் 7 தமிழ்க்கனவு’ என்று சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய் தமிழும் […]
ஸ்டாலினுக்கு 50 ஆயிரம்… எடப்பாடிக்கு 20 ஆயிரம்..! விருப்ப மனு ரேஸில் ஜெயிக்கப்போவது யாரு..?

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்பமனு வாங்குவதில் எப்போதும் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் பெரிய போட்டியே நடக்கும். ஜெயலலிதா இருந்த வரையிலும் தி.மு.க.வை விட அ.தி.மு.க.விலேயே அதிக எண்ணிக்கையில் விருப்பமனு பெறப்படும். இந்த நிலையில் வரும் 2024ம் ஆண்டுக்கு விருப்பமனு குறித்த அறிவிப்பை தி.மு.க.வே முதலில் வெளியிட்டது. அதில் பொதுத் தொகுதியில் போடியிட விரும்புபவர்கள் விண்ணப்பக் கட்டணம் 2 ஆயிரமும் டெபாசிட் தொகை 50 ஆயிரம் ரூபாயும் கட்டி மார்ச் 1ம் தேதிக்குள் தருமாறு அறிவித்திருக்கிறது. கடந்த தேர்தலில் […]
செல்வப்பெருந்தகையின் முதல் விக்கெட் யார்..? விஜயதாரணி, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போர்க்கொடி

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு கே.எஸ்.அழகிரிக்கு அடுத்து யார் என்று நிறைய பேர் போட்டி போட்டார்கள். சீனியர்களுக்கு பதவி இல்லை என்று ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, செல்லக்குமார், கார்த்தி சிதம்பரம், விஜயதாரணி ஆகியோர் முட்டி மோதினாலும், செல்வப்பெருந்தகைக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. ராகுல் காந்தி இப்போது பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், விவசாயிகள், பாட்டாளிகள், இன-மத-மொழி சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதியின் மீது நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஆகவே, பட்டியலினத்தைச் சேர்ந்த […]

