அடேங்கப்பா, கருணாநிதி சதுக்கத்தில் இத்தனை ஹைடெக் அட்டகாசங்களா… பார்க்க மறந்துடாதீங்க…

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த கருணாநிதி சதுக்கத்தில் புத்தம் புதிதாக ஏராளமான ஏற்பாடுகள் அட்டகாசமாக செய்யப்பட்டுள்ளன. அண்ணா சமாதியில், “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” எனப் பொறிக்கப்பட்டுள்ளது போன்று கருணாநிதி சமாதியில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் வாசகம் கலைஞரின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு கருணாநிதி அமர்ந்து எழுதும் வடிவிலான சிலை வடிக்கப்பட்டுள்ளது. கலைஞர் சதுக்கத்தின் முன்னே இருபுறமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழ்ச் செம்மொழி என ஒன்றிய அரசு ஏற்ற […]
கருணாநிதி நினைவிடம் திறந்துவைத்து ஸ்டாலின் நெகிழ்ச்சி… அண்ணாவுக்கும் மரியாதை

மெரினா கடற்கரையில் பிரமாண்டமான முறையில் கலைநயத்துடன் கட்டப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடங்களை பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து நெகிழ்ச்சி அடைந்தார். மெரினா கடற்கரையில் முதன்முதலாக அண்ணாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. தமிழினத் தலைவராக திகழ்ந்த அண்ணா 1969 பிப்.3ம் தேதி மறைந்த பின் அவருக்கு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் மிகச் சிறந்த கட்டிடக் கலை வடிவமைப்புடன் கலைஞரால் நினைவிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வராக 19 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்து, தமிழ்நாட்டை […]
புத்தம் புதிய பொலிவுடன் அண்ணா, கருணாநிதி சமாதி திறப்பு… ஹைடெக் அட்டகாசங்கள்

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நவீன தமிழ்நாட்டின் சிற்பி என அழைக்கப்படும் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2021ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, கடந்த இரண்டு வருடங்களாக அண்ணாவின் நினைவிடத்தை புதுப்பித்தும், கருணாநிதி நினைவிடமும் கட்டப்பட்டு வந்தன. தற்போது கட்டிட பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதையடுத்து இன்று மாலை 7 மணிக்கு அண்ணா, கருணாநிதியின் நினைவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது. சுமார் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய […]
தி.மு.க. தேர்தல் சீட் உத்தேசப் பட்டியல் வெளியீடு… டென்ஷனில் வைகோ, திருமா, காங்கிரஸ்

தி.மு.க.வுடன் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் உடன்பாடு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. இந்த நிலையில் தி.மு.க.வின் உத்தேசப் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதையொட்டி தி.மு.க. கூட்டணியில் கடும் புகைச்சல் எழுந்துள்ளது. கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அரக்கோணம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாமக்கல், பொள்ளாச்சி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் […]
சசிகலா வீட்டுக்குப் போன ரஜினிகாந்த்..! என்ன பேசுனாங்கன்னு தெரியுமா..?

தான் ஆசைப்பட்ட மாதிரியே போயஸ் கார்டனுக்கு சசிகலா குடியேறிவிட்டார். இனிமேல் தன்னுடைய அரசியல் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். இந்த நிலையில், இன்று சசிகலாவை ரஜினிகாந்த் குடும்பத்தோடு சென்று சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்துக்கு எதிராக பிரம்மாண்டமான பங்களாவை கட்டி குடிபுகுந்துள்ளார் சசிகலா. இந்த பங்களா 24000 சதுர அடி கொண்டது. வேதா இல்லத்தை விட மிகப் பெரியது. தரைதளமும், அதற்கு மேல் இரண்டு தளங்களுமாக இந்த பங்களாக கட்டப்பட்டுள்ளது. இந்த […]
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா பெயரில் மெகாமோசடி… தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் 5,000 ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கவர்ச்சிகரமான விளம்பரத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு ஒட்டுமொத்த வங்கிப் பணத்தையும் ஒரு கும்பல் கொள்ளை அடிப்பதாக பெருநகர சென்னை காவல்துறை எச்சரிக்கை செய்திருக்கிறது. ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இந்திய குடிமகன் ஒவ்வொரு நபரும் 5,000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதில் பிரதமர் மோடியின் படத்தையும் மோசடியாளர்கள் இடம் பெறச் செய்வதால் மக்கள் நம்பிக்கையுடன் அந்த விளம்பரத்தை […]
12 மாதத்தில் டபுள் ஆகும் முதலீடு… 300 பேரிடம் 15 கோடி ரூபாய் சீட்டிங் செய்த கும்பல் கைது..!

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அன்னை கேப்பிடல் சொலிசன்ஸ், அன்னை இன்போசாப்ட் சொலிசன்ஸ், அன்னை அகாடமி பிரைவேட் லிமிடெட், தமிழ் அன்னை ஹாலிடஸ் லிமிடேட் ஆகிய பெயர்களில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்திவந்த தினேஷ்குமாரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து தன்னிடம் 88 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டதாக மணலியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளிரிடம் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில், ’வாடிக்கையாளர்களிடம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 17,100 ரூபாய் வீதம் […]
தாமரைக்குத் தாவிய காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயதாரணி… விஜய் வசந்த் காரணமா..?

கடந்த மூன்று தலைமுறையாக காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருக்கும் விஜயதாரணி இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் டெல்லியில் அதிகாரபூர்வமாக பா.ஜ.க.வில் இணைந்துவிட்டார். கடந்த ஒரு மாதம் நடந்துவந்த இழுபறிக்கு முடிவு கிடைத்துவிட்டது. கட்சி மாறியதற்கு காரணம் கேட்டபோது, “பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச அளவில் இந்திய தேசம் பல சாதனைகளைப் புரிந்து வருவதால் அவரின் தலைமையில் அரசியல் பணியாற்ற பாஜகவில் இணைந்துள்ளேன்” என்று கூறினாலும் விஜய் வசந்த் மீது இருந்த கோபத்தாலே கட்சி மாறியதாக கூறப்படுகிறது. […]
எக்ஸ் எம்.எல்.ஏ. கந்தன் மகன் 500 பவுன் வரதட்சனை கொடுமை விவகாரத்தில் புது வில்லங்கம்…. கைது இல்லையா..?

சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பி.கந்தன் தற்போது அ.தி.மு.க.வில் சென்னை புறநகர் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர் மகனும் அ.தி.மு.க. கவுன்சிலருமான கே.பி.கே.சதீஷ்குமாருக்கும் மருத்துவரான ஸ்ருதி பிரியதர்ஷினிக்கும் கடந்த 2018ம் நடைபெற்றது. இந்த நிலையில் கே.பி.கந்தன் குடும்பத்தினர் தனது மகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஸ்ருதியின் தந்தை ஆவடி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், “திருமணத்தின் போது மகளுக்கு 500 பவுன், மருமகனுக்கு 100 பவுன் தங்க நகைகளும், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ […]
பிரதமர் யாருன்னு எடப்பாடி பழனிசாமி தீர்மானிப்பாராம்… அ.தி.மு.க. ஐ.டி. விங்க் சொல்றாங்கப்பா

ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ‘ஆட்சியிலும் சரி, அரசியலிலும் சரி, எந்தவிதத்திலும் சமரசம் இல்லாமல், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல், சமநிலையோடு, சமதர்மத்தோடு, சமூக நீதியோடு அரசாண்ட சிங்க நிகர்த் தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். தன்னுடைய வாழ்வு இந்த மக்களுக்கான தவ வாழ்வு. எப்போதும் மக்களிடத்திலே அதை நிரூபிக்கின்ற விதமாக “உங்களால் நான், உங்களுக்காகவே நான்” என்று தொடர்ந்து மக்கள் முன் சூளுரை ஏற்று, அதன்படி மக்கள் பணியாற்றிய […]

