News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தேர்தல் பத்திரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை… பா.ஜ.க.வின் விஞ்ஞான ஊழல் வெளிவருமா..?

பா.ஜ.க. அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் தேர்தல் பத்திர நன்கொடைக்காக் கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வகையில் கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நிதியும் கொடுக்க முடியும். அப்படி வழங்கப்படும் நிதி எவ்வளவு என்றும் எந்த நிறுவனம் வழங்கியது […]

ஏழு நாட்களில் 21 போதைக் குற்றவாளிகள் கைது..! காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு போட்டிருந்தார். இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 7.2.20224 முதல் 13.2.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 52 கிலோ […]

1,448 சிறுமிகளுக்கு பிரசவம் பார்த்தது தான் திராவிட மாடலா..? போட்டுத் தாக்கும் பா.ஜ.க.வின் நாராயணன் திருப்பதி

தமிழக பா.ஜ.க. துணைத்தலைவரான நாராயணன் திருப்பதி, நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் அதிர்ச்சிகர சம்பவங்களை வெளிப்படுத்தி, தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2021 முதல், அக்டோபர் 2023 வரையிலான 34 மாதங்களில் 18 வயதுக்கும் குறைவான பெண்கள் 1448 குழந்தைகளை பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தி குலை நடுங்க செய்கிறது. இதில் 1101 பிரசவங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்றதாக சொல்லப்படுவது கொடூரமான உண்மை. 347 குழந்தைகள் பிறந்தது […]

போதை விழிப்புணர்வுக்கு காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நடத்தும் குதிரையேற்றப் போட்டி..! கை கொடுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை குதிரைப்படை கடந்த 1780ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் வில்லியம் லாங்கனால் தொடங்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. பின்னர் 1800ம் ஆண்டு முதல் இந்த படையில் உள்ள குதிரைகள் சென்னை காவல் கண்கானிப்பாளர் வால்டர் கிராண்ட் மூலம் சென்னை காவல் துறைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்பிறகு 1926ம் ஆண்டு முதல் சென்னை காவல் குதிரைப்படை ஒரு சார்ஜண்ட் தலைமையில் ஒரு தனிப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு, சென்னை காவல் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு […]

இளம் பெண்ணுக்கு காஸ்ட்லி பரிசு காட்டி மேட்ரிமோனியல் மெகா மோசடி… நைஜீரிய கிரிமினல்களை கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீஸ்

திருமண ஆசை காட்டி நூதன முறையில் கே.கே.நகர் இளம் பெண்ணிடம் 2.87 கோடி ரூபாய் சீட்டிங் செய்த நைஜீரியர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீர் ராய் ரத்தோர் தலைமையிலான டீம் கைது செய்து சாதனை படைத்திருக்கிறது.   சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மேட்ரிமோனியல் இணையதளத்தில் திருமணத்திற்காகப் பதிவு செய்திருக்கிறார். அவரை வெளிநாட்டில் இருந்து தொடர்புகொண்ட அலெக்சாண்டர் சான்சீவ் என்பவர், திருமணம் செய்துகொள்ள விருப்பம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இருவரும் தொடர்ந்து வாட்ஸ் ஆப் […]

சீமானுக்கு என்.ஐ.ஏ. சம்மன்..? திட்டமிட்டு சீமானை மாட்டிவிட்ட சாட்டை துரைமுருகன்

என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘நாங்கள் என்ன செய்தாலும் அது சீமானுக்குத் தெரியும், அவரது முழு கட்டுப்பாட்டில் இருக்கிறோம், அவரது கட்டளைப்படியே செயல்படுகிறோம்’ என்று சொல்லி சீமானை அவரது நிர்வாகிகள் மாட்டிவிட்டதாக செய்திகள் கசிகின்றன. கடந்த 2ம் தேதி தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், கோவை ரஞ்சித், இசை மதிவாணன், பாலாஜி, முருகன் ஆகியோரது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் லேப்டாப், செல்போன்கள், […]

தமிழக முதல்வர் விஜய்… புதுவை முதல்வர் புஸ்ஸி ஆனந்த்..? புஸ்ஸியின் கேரள மாந்திரீக வில்லங்க பிளாஸ்பேக்

நடிகர் விஜய்க்கும் அவரது கட்சி நிர்வாகிகள், ரசிகர்களுக்கு மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் இடையில் நந்தி போன்று நிற்பவர் புஸ்ஸி ஆனந்த். யார் இந்த புஸ்ஸி ஆனந்த் என்று விசாரித்தால் எக்கச்சக்க வில்லங்க விவகாரங்கள் வந்து கொட்டுகின்றன. முதலில் அவர் பெயருக்கு முன்னே இருக்கும் புஸ்ஸி பற்றி பார்க்கலாம். புதுவையில் சுமார் 5,000 ஓட்டுகள் உள்ள சிறிய சட்டமன்றத் தொகுதி தான் ‘புஸ்ஸி தெரு’. இந்த தொகுதியில் புதுச்சேரி கண்ணன் தொடங்கிய புதுவை மாநில காங்கிரஸ் சார்பில், 2006-ம் ஆண்டு […]

மீண்டும் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு… அப்படின்னா இந்த முறையும் ஜாமீன் கிடைக்காதா..?

இந்த வாரம் செந்தில்பாலாஜி மீது ஜாமீன் மீது நடைபெறும் நேரத்தில் அவருக்கு எதிராக சரியான வாதங்கள் வைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், அவரை ஜாமீனில் விடுவிக்க வாய்ப்பு அதிகம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த முறை தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பு இல்லை.. சி.ஆர்.பி.எஃப். படை வீரர்கள் இல்லை. தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்கள் இல்லை. இதற்குப் பதிலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலர் மட்டும் […]

சைபர் கிரைம் பண மோசடிக்கு 1930க்கு போன் செய்யுங்க… சென்னை போலீஸ் எச்சரிக்கை

இப்போது யாரும் மணி பர்ஸில் பணம் வைப்பதில்லை, அதனால் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சீட்டிங் செய்து பணம் சம்பாதிப்பவர்கள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் பிறரை சுரண்டுவதற்கு அதிநவீன யுக்திகளை பலரும் கையாள்கிறார்கள். மூத்த அரசு அதிகாரிகள், தனிநபர் போன்று போலியாக சுயவிபரங்களை, அடையாள அட்டையை உருவாக்கிக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த மோசடிகள் பெரும்பாலும் சமூக ஊடக கணக்குகள் அல்லது தனிநபர்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் பிற […]

டி.ஆர்.பாலு எம்.பி. பதவி பறிக்கப்படுமா..? அமைச்சர் எல்.முருகனுடன் அன்ஃபிட் மோதல்

மோடி என்றால் திருடர் என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி வைத்த விவகாரம் ஜாதி விவகாரமாக மாற்றப்பட்டு, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அதனை நீதிமன்றத்துக்குச் சென்று மீட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பட்டியலின அமைச்சரை அவமானப்படுத்திய டி.ஆர்.பாலுவின் எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என்று பா.ஜக.வினர் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் தமிழக வெள்ளப் பாதிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பேசிய டி.ஆர்.பாலு, ‘மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள […]