News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

புத்தம் புதிய பொலிவுடன் அண்ணா, கருணாநிதி சமாதி திறப்பு… ஹைடெக் அட்டகாசங்கள்

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நவீன தமிழ்நாட்டின் சிற்பி என அழைக்கப்படும் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2021ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, கடந்த இரண்டு வருடங்களாக அண்ணாவின் நினைவிடத்தை புதுப்பித்தும், கருணாநிதி நினைவிடமும் கட்டப்பட்டு வந்தன. தற்போது கட்டிட பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதையடுத்து இன்று மாலை 7 மணிக்கு அண்ணா, கருணாநிதியின் நினைவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது. சுமார் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய […]

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா பெயரில் மெகாமோசடி… தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் 5,000 ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கவர்ச்சிகரமான விளம்பரத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு ஒட்டுமொத்த வங்கிப் பணத்தையும் ஒரு கும்பல் கொள்ளை அடிப்பதாக பெருநகர சென்னை காவல்துறை எச்சரிக்கை செய்திருக்கிறது. ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இந்திய குடிமகன் ஒவ்வொரு நபரும் 5,000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதில் பிரதமர் மோடியின் படத்தையும் மோசடியாளர்கள் இடம் பெறச் செய்வதால் மக்கள் நம்பிக்கையுடன் அந்த விளம்பரத்தை […]

12 மாதத்தில் டபுள் ஆகும் முதலீடு… 300 பேரிடம் 15 கோடி ரூபாய் சீட்டிங் செய்த கும்பல் கைது..!

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அன்னை கேப்பிடல் சொலிசன்ஸ், அன்னை இன்போசாப்ட் சொலிசன்ஸ், அன்னை அகாடமி பிரைவேட் லிமிடெட், தமிழ் அன்னை ஹாலிடஸ் லிமிடேட் ஆகிய பெயர்களில்  ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்திவந்த தினேஷ்குமாரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து தன்னிடம் 88 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டதாக மணலியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளிரிடம் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில், ’வாடிக்கையாளர்களிடம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 17,100 ரூபாய் வீதம் […]

நெல்லை கல் குவாரி 700 கோடி ரூபாய் ஊழலுக்கு சீமான் போர்க்கொடி

திருநெல்வேலி மாவட்டத்தின் கல் குவாரிகளில் தமிழ்நாடு அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் 700 கோடி ரூபாய் ஊழலை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவந்துள்ளது அறப்போர் இயக்கம். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வள வேட்டையைத் தொடரப்போகிறது திமுக அரசு? திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் கல் குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டப் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனராக இருந்த திரு நிர்மல்ராஜ் IAS, முறைகேடாக இயங்கிய (54 குவாரிகளில் 53 குவாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட 281 சதவீதம் அதிகமாக, சட்ட விரோதமாக […]

காவலரின் மனிதாபிமானத்துக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு

காவல் துறைக்கு சல்யூட் அடிக்கும் வகையில் அவ்வப்போது சில நல்ல செயல்கள் அரங்கேறுகின்றன. அப்படி ஒரு செயலை செய்திருக்கும் ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவைச் சேர்ந்த இரண்டாம் நிலைக்காவலர் பி.விக்னேஷ் பாண்டி என்ப்வர் என் 2 காசிமேடு காவல் நிலைய சுற்றுக் காவல் வாகனத்தின் ஓட்டுனராகப் பணிபுரிந்து வருகிறார். விக்னேஷ் பாண்டி, கடந்த 20.02.2024 […]

28 கிரிமினல்களை குண்டர் சட்டத்தில் போட்ட சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்… அலறி ஓடும் கஞ்சா பார்ட்டிகள்

போதைக்கு கஞ்சா மட்டுமின்றி வலி நிவாரண மாத்திரைகளையும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அனைத்து வகையிலான கஞ்சா மற்றும் போதை குற்றவாளிகளையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையிலான டீம் கைது செய்து அதிரடி காட்டியுள்ளது. புதுப்புது வழிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை சென்னை பெருநகரில் உலவவிடும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யுமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், […]

அரசு நிலங்களை தனியாருக்கு கொடுத்து கோடிகளில் மோசடி..? தில்லுமுல்லு அதிகாரிகளைக் கண்டுபிடிக்க விசாரணைக் குழுக்கள்

அரசுக்கு சொந்தமான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, பதிவுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் சிலரின் துணையோடு, தனி நபர்களுக்குப் பெயர் மாற்றம் செய்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதாக அரசுக்கு புகார்கள் தொடர்ந்து வருகின்றன. இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய அரசு விசாரணைக் குழு அமைத்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் தனி நபர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அதன் அடிப்படையில் அரசு நிலம் முறைகேடாக பதிவு செய்து ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதோடு, முறைகேடான […]

உயிருக்கு அஞ்சாமல் டெல்லிக்குப் படையெடுக்கும் விவசாயிகள்.. கலவர எச்சரிக்கை

விவசாயப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, டெல்லி நோக்கி விவசாயிகள் செல்வதற்குத் தயாராகிறார்கள். பஞ்சாப் – ஹரியாணாவை ஒட்டிய ஷாம்பு எல்லையில் 14 ஆயிரம் விவசாயிகள் 1200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களுடன் குவிந்துள்ளனர். கடந்தமுறை டெல்லியை நோக்கி […]

கூவத்தூர் கும்மாளத்திற்கு நடிகை த்ரிஷாவை கூட்டிச் சென்றாரா கருணாஸ்..? எடப்பாடி டீமுக்குள் கசமுசா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூவத்தூரில் நடிகைகளை எல்லாம் கூட்டி வந்து, எம்.எல்.ஏக்களை வைத்து கும்மாளம் அடித்தார் என்கிறார் ஏ.வி ராஜூ. இவர் சேலம் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். இவருக்கும் சேலம் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்துக்கும் இடையிலான மோதல் காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதன்படி, மாநகர மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்துக்கு 1,000 கோடி ரூபாய் சொத்து இருப்பதைப் பார்க்கும்போது, அவர் எடப்பாடி பழனிசாமிக்கு பினாமியாக இருப்பார் […]

விவசாயிகளுக்கு எதிரா சட்டசபையில் பொய் சொல்லாதீங்க… தி.மு.க.வுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எச்சரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு 99% உழவர்கள் ஆதரவு என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியிருப்பது பொய் என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 3 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. 11 கிராமங்களில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்களின் நிலங்கள் இதற்காக பறிக்கப்படவுள்ளன. இதைக் கண்டித்து 90% உழவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரமாக திகழும் […]