News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நிவேதா பெத்துராஜ்க்கு ஆதரவாக அ.தி.மு.க..? என்னதான் நடக்குது இங்கே..?

அமைச்சர் உதயநிதி துபாயில் நிவேதா பெத்துராஜ்க்கு மிகப்பெரிய சொத்து வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று சவுக்கு சங்கர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஒட்டுமொத்த சினிமா உலகமும் அரசியல்வாதிகளும் அமைதி காக்கும் நேரத்தில் அ.தி.மு.க.வில் இணைந்திருக்கும் காயத்ரி ரகுராம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருப்பது ஆச்சர்யத்தை உருவாக்கியிருக்கிறது. சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு குறித்து கண்ணீர் விளக்கம் கொடுத்திருக்கும் நிவேதா, ‘நான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவள். யாருடைய ஆதரவும் எனக்குத் தேவையில்லை, அதேநேரம், இந்த குற்றச்சாட்டை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதில்லை’ என்று தெரிவித்திருந்தார். […]

தி.மு.க. பணத்தை தமிழக மக்களுக்குத் தருவதாக மோடி உத்தரவாதம்..! விரைவு ஈனுலை தொடக்கம்… போதைக்கு எச்சரிக்கை

கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘தற்சார்பு இந்தியா’ கொள்கையின் அடிப்படையில், 500 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட நாட்டின் முதலாவது விரைவு ஈனுலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஈனுலையை திறந்து வைத்த பிரதமர், ‘கோர் லோடிங்’ பணி தொடங்கப்பட்டதையும் பார்வையிட்டார். அணு உலையின் பெட்டகம், கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை சுற்றிப்பார்த்தார். அணு உலையின் முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார். இந்த விரைவு ஈனுலை ஒரு மேம்பட்ட 3ம் தலைமுறை உலை ஆகும். அவசரநிலை ஏற்பட்டால் ஆலையை […]

பிரதமர் மோடி, ஸ்டாலினுக்கு சீமான் கடும் எதிர்ப்பு… அணுவுலைக்கு எதிராக ஆவேசப் போர்

பிரதமர் மோடி தமிழகம் வரும் நேரத்தில் எல்லாம் தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும், ‘கோ பேக் மோடி’ என்று டிரெண்டிங் செய்வது வழக்கம். ஆனால், இன்றைய பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் கல்பாக்கம் ஈணுலைத் திட்டத்துக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நாம் சின்னத்தின் விவசாயி சின்னம் பறிபோக அண்ணாமலையே காரணம் என்று பொதுவெளியில் நாம் தமிழர்கள் கடுமையாக விவாதிக்கும் நிலையில், இந்த எதிர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை கல்பாக்கத்திலுள்ள அணுவுலை […]

சீமான் மாமா என்னை கவனிங்க… தேர்தலுக்கு விஜயலட்சுமி என்ட்ரி

அவ்வப்போது சீமான் குறித்து வீடியோ வெளியிடுவதும் பின்னர் காணாமல் போவதும் நடிகை விஜயலட்சுமியின் ஸ்டைல். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கேஸ் கொடுத்து சீமானை விடவே மாட்டேன் என்று வீராப்பு காட்டியவர் அதன்பிறகு பெங்களூருக்குப் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வீடியோ வெளியிட்டு தேர்தல் கால பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த வீடியோவில் விஜயலட்சுமி, ‘’பெங்களூரில் உள்ள உயரமான கட்டடத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறேன். மீடியாக்கள் இந்த வீடியோவை என் கணவரான சீமான் பார்க்கும் வரை ஒளிபரப்புங்கள் என […]

அண்ணாமலை போதை எச்சரிக்கை… இன்று மதுரையில் மெத்தபெட்டமைன் பறிமுதல்… ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருக்கிறதா?

ஒருவழியாக பாதயாத்திரையை முடித்த கையோடு, புதிய கெட்டப்புக்கு மாறியிருக்கும் அண்ணாமலை இப்போது போதை பொருள் கடத்தல் ஜாபர் சாதிக் மேட்டரை மிகத் தீவிரமாக எடுத்து அரசியல் செய்துவருகிறார். தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிக அளவில் ஊடுருவி இருப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள் 30 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் ஜாபர் சாதிக்கிற்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடந்துவருகிறது. இந்த சம்பவத்தில் ஜாபர் சாதிக் நீண்ட நாட்களாக […]

ஸ்டெர்லைட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் நிரந்தர மூடு விழா… வைகோ போராட்டத்துக்கு வெற்றி

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக அமைந்துள்ளது. தமிழக அரசு உறுதியாக இருந்தது என்றாலும் இதனை வைகோவின் வெற்றியாகவே கொண்டாடுகிறார்கள். இதுகுறித்து வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் […]

தருமபுரி ஆதினத்துக்கு ஆபாச வீடியோ மிரட்டல்… பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம் கைது

இந்துக்களை பாதுகாக்கும் கட்சி என்றும் கோயிலை அரசிடம் இருந்து மீட்க வேண்டும் என்றும் குரல் கொடுத்துவரும் பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் ஒருவர் ஆதினத்தை பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் படு சர்ச்சையை ஏற்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி ஆதினத்தை பணம் கேட்டு மிரட்டியதோடு, ஆதினத்தின் ஆபாச வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுட்டு விடுவேன் என்று மிரட்டி 20 கோடி ரூபாய் பணம் கேட்டு பா.ஜ.க. நிர்வாகி மிரட்டுவதாக ஆதினத்தின் சகோதரர் விருத்தகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து […]

கஞ்சா சாக்லேட்… கடத்தல் பெண்கள்… ஒரே வாரத்தில் 41 கிரிமினல்களை கைதுசெய்த தனிப்படை போலீஸ்

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், விற்பனையாளர்களை கண்டறிந்து கைது செய்வதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு போட்டிருக்கிறார். அதன்படி, ‘போதை தடுப்பு நடவடிக்கை’ எடுப்பதற்காக கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனிப்படையினர் கடந்த 21.2.2024 முதல் 27.2.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா போதை பொருட்கள் […]

பெற்ற தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றாமலே சாந்தன் மரணம்… வேதனையில் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள்

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் உடல் நலம் தேறிவருகிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்று காலை காலமானார். கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார். முன்னாள் பிரதமர் […]

சிவகுமார் இப்படி அட்டூழியம் செய்யலாமா..? வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா..?

பொதுவெளியில் கம்பராமாயணம், திருக்குறள் போன்றவைகளைப் பேசி அப்ளாஸ் வாங்கும் நடிகர் சிவகுமார், அவ்வப்போது ஏடாகூட காரியங்களைச் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். முன்பு செல்ஃபி எடுக்க முன்வந்தவரின் செல்போனை தூக்கிப் போட்ட சிவகுமார் இப்போது பொன்னாடை போர்த்தவந்த முதியவரின் கையில் இருந்து அதை பறித்து தூர வீசியிருக்கிறார். இதை பார்த்த அத்தனை பேரும் அதிர்ந்துபோகிறார்கள். யோகா, தியானம், அன்பு, நேர்மை என்றெல்லாம் நிறையவே பேசும் சிவகுமார் இப்படி செய்யலாமா என்பது அத்தனை பேர் மனதிலும் கேள்வியாக எழுகிறது. படித்த […]