பொன்முடியை அமைச்சராக்கவே முடியாது – ஸ்டாலினுக்கு கவர்னர் சவால்

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்ட பிறகும், அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் டெல்லிக்குப் போய்விட்டார். டெல்லியில் இருந்து திரும்பிய பிறகும் அந்த கோரிக்கையை மறுத்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது, குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வந்திருக்கலாம். ஆனால் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கவில்லை, சார்ஜஸ் […]
கனிமொழிக்கு எதிராக ராதிகா..? பா.ஜ.க.வின் முதல் பட்டியலில் 10 வேட்பாளர்கள் ரெடி

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி முடிவாகிவிட்டது என்றாலும் எதிர்க் கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கும் இழுபறி நிலையே நீடிக்கிறது. பா.ம.க. மற்று தே.மு.தி.க. ஆகிய இரண்டு கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்வதையே விரும்புகின்றன. ஆனால், மத்திய பா.ஜ.க. ஏதேனும் அழுத்தம் கொடுத்து தங்கள் பக்கம் ஏதேனும் ஒரு கட்சியை இழுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஆகவே, இரண்டு பக்கமும் தேர்தல் கூட்டணி இழுபறியாக உள்ளது. இந்த நிலையில் மற்றவர்களுக்கு முன்பாக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று […]
பா.ஜ.க.வின் அடிமையா தேர்தல் கமிஷன்..? ஏழு கட்டத் தேர்தலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு

40 தொகுதிகள் கொண்ட தமிழகத்துக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் அதேநேரத்தில் உத்திரப்பிரதேசத்திற்கு மட்டும் ஏழு கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுவதற்குப் பின்னே ஆளும் பா.ஜ.க.வின் அழுத்தம் இருப்பதாக கருதப்படுகிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்த பா.ஜ.க. பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்திற்கு வசதியாகவே தேர்தல் நடத்துவதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2014ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படாததும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இது குறித்து தி.மு.க. சார்பில், ’40 […]
யாருய்யா இந்த லாட்டரி கிங் மார்ட்டின்..? எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்

இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார் லாட்டரி கிங் என்று அழைக்கப்படும் மார்ட்டின். தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி கொடுத்தது, இவரது பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் தான். இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2024-ஆம் ஆண்டு ஜனவரிக்கு இடையில் இந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை […]
பள்ளி மாணவியிடம் சில்மிஷம்… போக்சோவில் சிக்கிய எடியூரப்பா

பாலியல் புகார்கள் அரசியல் தலைவர்கள் மீது அவ்வப்போது எழுவதும், அப்படியே அடங்கிப்போவதும் உண்டு. இப்போது கர்நாடக முன்னாள் முதல்வரும் பா.ஜ.க. முக்கியப் புள்ளியுமான எடியூரப்பா மீது எழுந்திருக்கும் புகாரும் அடுத்து எடுக்கப்பட்டுள்ள போக்சோ நடவடிக்கையும் நாட்டையே அதிர வைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி கல்வி உதவித் தொகை தொடர்பாக தாயுடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்ற ஒரு 17 வயது மாணவியிடம் கூடுதல் தகவல் கேட்க வேண்டும் என்று தனி அறைக்குள் அழைத்து சென்றுள்ளார். அந்த அறையில் […]
தேர்தல் பத்திரம் பணம் ஒவ்வொரு இந்தியனுக்கும் வழங்கப்படுமா?

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாக தேர்தல் பத்திரங்களை பா.ஜ.க. அரசு 2017ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் ஸ்டேட் வங்கியின் கிளைகளில் வாங்கலாம். அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் நன்கொடையாக அளிக்கலாம். கடந்த 2017ம் ஆண்டு பா.ஜ.க. அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திர திட்டம் 2018 ஜனவரி 29ம் தேதி முதல் சட்டப்பூர்வமாக அமலுக்கு வந்தது. இந்தத் திட்டத்தின் […]
முதலில் ரெய்டு… அப்புறம் வசூல்..! பா.ஜ.க. கணக்கில் வாங்கியதே 11,562 கோடி என்றால் பிளாக்கில் எவ்வளவு..?

அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள உரிமை இல்லை என்றும் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்து விசாரிக்க நீதிமன்றத்திற்கு அவசியம் இல்லை என்றெல்லாம் மோடி அரசு தேர்தல் பத்திரங்கள் விசாரணையை முடக்கப் பார்த்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உறுதியாக இருந்த காரணத்தால் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்த விவகாரத்தில் பா.ஜ.க.வின் விஞ்ஞான ரீதியிலான வசூல் வேட்டை அம்பலத்துக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் […]
ஸ்டாலினுடன் மீண்டும் கவர்னர் ஆர்.என்.ரவி நேரடி மோதல்… பொன்முடிக்கு சிக்கலோ சிக்கல்

தமிழக அரசுக்கும் தமிழக கவர்னருக்கும் பல்வேறு விஷயங்களில் மோதல் நடந்துவருகிறது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை கண்டுகொள்ளாமல் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்குப் பயணம் கிளம்பியிருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார். திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அமைச்சராக பொன்முடிக்கு […]
ஸ்டாலினால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் தடுக்க முடியுமா..? உண்மை நிலை என்ன..?

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவசரகதியில் சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதாக கூறியிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த சட்டத்தினால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப்போவதில்லை என்பதால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் கருத்து என்று கூறியிருக்கிறார். இந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று ஸ்டாலின் கூறியிருப்பது போலவே கேரளா, மேற்குவங்கம், பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, […]
தமிழ்நாடு அரசை கலைக்கும் திட்டமா..? ஜாபர் சாதிக் விவகாரத்தில் அமித் ஷா ஆலோசனை

ஜாபர் சாதிக்கை டெல்லியில் கைது செய்தோம் என என்.சி.பி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அவர் ஜெய்ப்பூரில் இருந்து பாகிஸ்தானுக்குத் தப்பியோட திட்டமிட்டிருந்ததாக பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. அதேபோல் ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடக்கும் முன்னரே, அவர் தி.மு.க.வுக்கு 7 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார் என்று செய்திகள் திட்டமிட்டுப் பரப்பட்டு வருகின்றன. அதேபோல் போதைக் குற்றவாளிகளை கைது செய்திருக்கும் டெல்லி ஸ்பெஷல் செல்லுக்கு இதனை விசாரிக்கும் அதிகாரம் இருக்கும் நிலையில், என்.சி.பி.யிடம் திட்டமிட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் […]

