News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

விஜய் ஆட்சிக்கு வந்தது முதலாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அந்த வகையில், 1996 ஆம் ஆண்டு பேட்ச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ஏ. அமல்ராஜ், இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்னை மாநகரக் காவல் ஆணையராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கோப்புகளில் கையெழுத்திட்டு அவர் பதவியேற்றுக் கொண்ட இந்த எளிய நிகழ்வின் போது, காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே, கிண்டி ஆளுநர் மாளிகைக்கு விரைந்த அமல்ராஜ், அங்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஏ.எம். ஷாஜகான் ஆகியோரின் பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ரவுடித்தனம் மற்றும் பொது ஒழுங்கைக் கையாள்வதில் பெயர் பெற்ற அமல்ராஜ், இதற்கு முன்னர் இரண்டு முறை தாம்பரம் ஆணையராகவும், அமலாக்கப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.யாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link