Share via:
நிதிநிலை அறிக்கைக்கு மைனஸ் மதிப்பெண் கொடுத்த எடப்பாடி பழனிசாமி,
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க் கொடுத்துள்ளார்.
வேளாண் பட்ஜெட் குறித்து இபிஎஸ், ‘’இரண்டரை மணி நேரம் பட்ஜெட்
வாசித்ததில் புதிதாக ஒரு திட்டமும் இல்லை. தவெக தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில்
இடம்பெறவில்லை.
மேகேதாட்டு குறித்தெல்லாம் பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. பொது பட்ஜெட்டுக்கு
பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுத்தோம். வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம்.
தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அவை பட்ஜெட்டில்
இல்லை.
பொது பட்ஜெட் போல, ஸ்டிக்கர் ஒட்டி வேளாண் பட்ஜெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி போல தவெகவின் வேளாண் பட்ஜெட்டும் ஒரு நாடகம். இனிக்க இனிக்க விவசாயிகளை
ஏமாற்றி இருக்கிறார்கள்.
கடந்த திமுக அரசும், இப்போதைய தவெக அரசும் விவாசயிகளை ஏமாற்றி
நாடகம் ஆடுகிறது. தேர்தல் வாக்குறுதி போல் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை.
20 துறைகளை ஒன்றாக இணைத்து வேளாண் பட்ஜெட் என்கிறார்கள். பிறகு ஏன் 20 துறைகளுக்கும்
அமைச்சர் தேவை, மானிய கோரிக்கைகள் தேவை. வேளாண் பட்ஜெட் பற்றி அமைச்சர் 2.35 மணி நேரம்
பேசியிருக்கிறார். இது தான் சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் விவசாய மக்களுக்கு ஒரு
பயனும் இல்லை.’’ என்று சாட்டையடி கொடுத்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின், ‘’குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக
இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த
குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில்
இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்’’
என்று கேட்டுள்ளார்.