News

Follow Us

நடிகை நிவேதா பெத்துராஜ்க்கு அறிமுகம் தேவையில்லை. மதுரை பொண்ணு என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். தமிழில், சங்கத்தமிழன்’, ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ‘திமிரு பிடிச்சவன்’, ‘பொன் மாணிக்கவேல்’, ‘டிக் டிக் டிக்’ போன்றப் படங்களில் நடித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தெலுங்கு மொழியிலும் நிறைய படங்களில் நடித்துவருகிறார்.

நிவேதா பெத்துராஜ்க்கும் நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையில் காதல் இருப்பதாக பலத்த கிசுகிசு பரவியது. இதனை இரண்டு தரப்பினரும் மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை.

நிவேதாவுக்கு நடிப்பு, மாடலிங் மட்டுமல்லாது விளையாட்டிலும் அதிக ஆர்வம் உண்டு. குறிப்பாக ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ’ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ் ரேஸிங் பயிற்சியில்’ கலந்து கொண்டு அசத்தினார்.

இந்நிலையில்தான் டால்ஃபின் ஸ்போர்ஸ் மேனேஜ்மென்ட் நடத்திய இந்த பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணிக்காக இரட்டையர் பிரிவில் பங்கேற்ற நிவேதா பெத்துராஜ் அதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். எனவே வெற்றிப் பதக்கத்துடன் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நிவேதா பெத்துராஜ்க்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அதேநேரம், விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகை நிவேதா பெத்துராஜ்க்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்க வேண்டும் என்று நிறைய ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு பாராட்டாவது சொல்லுங்க உதய். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link