News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திருப்பரங்குன்றத்தில் இன்றைய தீபமேற்றும் நடவடிக்கையில் எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்று தமிழ்நாடு முழுக்கவே பதட்டம் நிலவுகிறது. விஜய் அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கவே இல்லை.

இதுகுறித்து திராவிடர் கழகத்தினர், ‘’தமிழ்நாட்டின் 150 ஆண்டுகால பாரம்பரிய வழிபாட்டு முறையை மீறச்சொல்லி தடாலடியாக உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதி மன்றம். மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட அறங்காவலர் குழுவை கலைத்ததோடு தீபக்கல்லில் எல்லோரும் போய் தீபம் ஏற்றலாம் என்று அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

உச்ச நீதிமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள்! தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை டெல்லியில் இருந்து உச்சநீதிமன்றமே நடத்த துவங்கி விட்டதா என்ற கேள்வி எழுகிறது. ஒன்றிய தொல்லியல் துறை அப்பட்டமான பொய்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து காவி அடையாளத்தை வெளிப்படுத்திருக்கிறது’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலைப் பகுதி தற்போது முழுவதுமாக மத்திய ரிசர்வ் காவல் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, கோயம்புத்தூரில் இருந்து மத்திய ரிசர்வ் காவல் படையின் அதிவிரைவு படை பட்டாலியன் 107 வீரர்களுடன் திருப்பரங்குன்றம் வந்தடைந்துள்ளனர்.

நேற்றைய உச்சநீதிமன்றத்தின் மூன்று உத்தரவுகள் இன்று நிறைவேற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன. அதன்படி மலை முழுவதும் சி.ஆர்.பி.எஃப். வசம் திருப்பரங்குன்றம் மலை ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோயிலின் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்துவிட்டு, கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது. மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவிற்கு போதிய பாதுகாப்பு வழங்குவதோடு, தர்காவிற்கு வழிபாடு நடத்தச் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்ந்லையில் இன்று சிக்கந்தர் தர்காவுக்கு இஸ்லாமியர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இஸ்லாமியர்களை யாரும் தடுக்கக் கூடாது என்பதால், அவர்களுடைய வருகை அதிகரிக்கும் என்று தெரிகிறது.  

இன்று உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீயை எடுத்து வந்து, தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்காவைச் சுற்றி 50 மீட்டர் தொலைவிற்கு அப்பால், தீபத்தூணில் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது.

தற்போது திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் பரபரப்பாகவும், அதே நேரத்தில் பலத்த பாதுகாப்புடனும் காணப்படுகிறது. விஜய் தீவிர ஆலோசனையில் இருக்கிறார். இன்றைய தினம் என்ன நடக்கப்போகிறது என்பதில்தான் தமிழக்த்தின் எதிர்காலம் இருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link