Share via:
திமுகவின் ஆதரவு இருந்தால் மட்டுமே தொகுதி மறுவரையறை நிறைவேறும்
எனும் சூழலில், திடீர் பல்டி அடித்திருக்கிறது தி.மு.க. அதேநேரம், கீழே விழுந்தாலும்
மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைக் காட்டும் வகையில், ‘திமுகவுக்குக் கிடைத்த வெற்றி’
என்று கூறியிருக்கிறார்.
அதாவது, 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை
மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒரே சீராக
50 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்றும் திமுக முன்வைத்த இரண்டு முக்கியக் கோரிக்கைகளும்
இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளன என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம் இந்த தொகுதி மறுவரையறை ஏன் எதிர்க்கப்பட வேண்டும்? இந்திய
ஜனநாயகத்திற்கு காத்திருக்கும் ஆபத்துகளை தவெக பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் தற்போது
80 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இது 120 ஆக உயர வாய்ப்புள்ளது. அதேபோல் 403 சட்டமன்ற
உறுப்பினர்கள் சுமார் 605 ஆக உயரலாம். உத்தரப்பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து தேர்தல்களில்
வெற்றி பெற்று அதிக இடங்களைக் கைப்பற்றினால், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றத்திலும்
அதன் அரசியல் பலம் மேலும் அதிகரிக்கும். தென் மாநிலங்களின் அரசியல் உரிமை என்னவாகும்?
ஒரு கட்சி நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் மிகப்பெரிய
பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால், எதிர்க்கட்சிகளின் குரல் பலவீனமடையும் அபாயம் உள்ளது.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டால் அரசியலமைப்புத் திருத்தங்கள்
உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஆளுங்கட்சியின் செல்வாக்கு மிக அதிகமாகிவிடும்.
எதிர்க்கட்சிகளின் கண்காணிப்பும், கூட்டணிக் கட்சிகளின் அரசியல் அழுத்தமும் இல்லாத
அதிகாரக் குவிப்பு ஜனநாயக நிறுவனங்களின் சுதந்திரத்தையே பாதிக்கக்கூடும்.
சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகள் திட்டமிட்டு வெவ்வேறு
தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவர்களின் அரசியல் செல்வாக்கு சிதறடிக்கப்படும். ஆளுங்கட்சிக்குச்
சாதகமாக தொகுதி எல்லைகள் வரையறை செய்யப்படும். அவர்களின் வெற்றி எளிதாகும்.
இத்தனை MP, MLA-க்கள் எதற்கு? ஏற்கெனவே 543 மக்களவை உறுப்பினர்கள்
இருக்கிறார்கள். அவர்களுக்கே நாடாளுமன்றத்தில் தங்கள் கருத்துகளை முழுமையாக எடுத்துரைக்கப்
போதுமான நேரம் கிடைக்கவில்லை. எனவே எண்ணிக்கையை மட்டும் அதிகரிப்பதால் ஜனநாயகத்தின்
தரம் உயர்ந்துவிடாது.
எனவே, தமிழ்நாட்டின் நலனையும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும்
பாதிக்கும் ஆதரித்தால் இந்த முடிவை மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். திமுகவின்
இந்த அரசியல் நிலைப்பாட்டை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’’ என்கிறார்கள்.
பாஜகவின் மறைமுகக் கூட்டணியான திமுக இப்போது நேர்வழிக் கூட்டணியாக
மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை. நவீன சாவர்க்கராக மாறியிருக்கிறார் ஸ்டாலின்.

