Share via:
தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் ஒருபோதும் விட மாட்டேன்
என்று முதல்வர் விஜய் உறுதி கொடுத்திருந்தார். அதன்படி, பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி
அனுப்பிய வழக்கில் கைதான அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை கைது செய்யப்பட்ட அருள் விக்னேஷிடம் அனைத்து மகளிர்
காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை
முடிந்த பிறகு கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) மற்றும்
தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவை பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பதால், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உடனடியாக
ஜாமீன் கிடைப்பது கடினம்.
கூடுதல் தலைமைச் செயலாளர் ககர்லா உஷா தலைமையிலான 4 பேர் கொண்ட
விசாகா குழுவும் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது… இந்தக் குழு 60 நாட்களுக்குள்
தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது… சென்னை உயர்நீதிமன்றமமும் இவ்வழக்கின்
இறுதி விசாரணை அறிக்கையை வருகிற டிசம்பர் 22ம் தேதிக்குள் தாக்கல் செய்யக் காவல்துறைக்கு
உத்தரவிட்டுள்ளது.
விசாரணை முடிவின் அடிப்படையில் இவர்மேல் கட்சி நடவடிக்கை இருக்கும்
என தவெக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன… சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.வை கைது செய்வது
என்பதை 50 வருட திராவிடக்கட்சிகளில் நினைத்தும் பார்க்க முடியாது.
அதை விஜய் செயலிலும் காட்டி உள்ளார். விஜய் தனது அதிகாரப்பூர்வ
இல்லமான ‘பாமினி இல்லம்’-இல் நடத்திய உயர்மட்டக் குழு கூட்டத்திற்குப் பிறகே அருள்
விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தில் மாநில தலைமைச் செயலாளர் சாய் குமார்,
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், மாநில உளவுத்துறை காவல்துறைத்
தலைவர் அஸ்ரா கார்க் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த
சில நிமிடங்களிலேயே, பாலியல் துன்புறுத்தல் வழக்கில் டி.வி.கே சட்டமன்ற உறுப்பினர்
அருள் விக்னேஷைக் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் ஐபிஎஸ் தலைமையிலான போலீசார்
டிவிகே எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்தனர். தமிழ்நாட்டில் பாலியல் வழக்கில் கைது
செய்யப்பட்ட முதல் எம்எல்ஏ அருள் விக்னேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்
விஜய்.

