Share via:
அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை
மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட .258 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்
கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட ஜான் பிரிட்டோ, தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள்
மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்று சொல்லப்படும்
நிலையில், அவருக்கும் ஆதவ் அர்ஜூனாவுக்கும் தொடர்பு இல்லை என்று விஜய் கட்சி விளக்கம்
கொடுத்துள்ளது.
போதை பொருள் கடத்தல் வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள சர்வதேச
போதை பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோ மீதான வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது.
இதனால் ஜான் பிரிட்டோவின் தங்கை லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் லீமா ரோஸ் மார்ட்டின்
மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா ஆகியோரும் போதைப் பொருள் வழக்கில் சிக்கியிருக்கும் தகவல்கள்
தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், டெய்சி தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
மனைவி என்பதால் அவர்கள் மூலம் தவெக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மியான்மார், டென்மார்க்போன்ற நாடுகளில் இருந்து உயர் ரக போதை பொருட்கள்
இந்திய கடலோர எல்லையான மன்னார் வளைக்குடா வழியாக இலங்கைக்கு கடந்த 2024 மார்ச் 5ம்
கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி
அன்று அதிகாலை 5 மணிக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்திய கடலோரக்
காவல்படையினருடன் இணைந்து நடத்திய கூட்டு அதிரடி சோதனையில், இலங்கைக்குக் மீனவர்கள்
படகுகள் மூலம் கடத்தப்பட்டு வந்த ரூ.108 கோடி மதிப்புள்ள 99 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல்
செய்தனர்.
அப்போது கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த தகவலின் படி, இந்த போதை
பொருள் கடத்தல் வழக்கில் கோவை மாவட்டம் சத்தியமங்கலம் சிவநந்தபுரம் திருவள்ளுவர் நகரை
சேர்ந்த ஜான் பிரிட்டோ(57) என்பவர் இருந்தது தெரியவந்தது. இவர் சர்வதேச போதை பொருள்
கடத்தல் கும்பலின் நேரடி தொடர்பில் உள்ள முக்கிய போதை பொருள் கடத்தல் மன்னன் என்று
விசாரணையில் தெரியவந்தது. ஜான் பிரிட்டோ தான் இந்தியாவுக்கான போதை பொருள் கடத்தலை தலைமை
ஏற்று இலங்கைக்கு போதை பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இவர் மூலம் 15 நாடுகளுக்கு போதை பொருள் கடத்தி வந்ததும், அதன்
மூலம் ஜான் பிரிட்டோ பல ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோதமாக சம்பாதித்து, அந்த பணத்தை
தனது உறவினர்கள் மூலம் பல நிறுவனங்களில் முதலீடு செய்து வந்ததும் தெரியவந்தது.
ஜான் பிரிட்டோவை கேரளா, குஜராத் மாநிலங்களில் போதை பொருள் கடத்தல்
வழக்குகளில் தேடி வருகின்றனர். இதனால் அவர் இந்தியாவில் இருந்து தலைமறைவாகி தற்போது
மியன்மார், டென்மார் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அமலாக்கத்துறை
ஜான் பிரிட்டோ மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து
அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தற்போது அதிமுக சார்பில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்
லீமா ரோஸ் மார்ட்டின் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். லீமா ரோஸ்
மார்ட்டின் மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா கணவரான ஆதவ் அர்ஜூனா தவெக கட்சி சார்பில் சென்னை
வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியில் வெற்றி பெற்றார். தற்போது டெய்சி ஆதவ் அர்ஜூனா
கணவர் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சிறிய துறைமுகங்கள், நெடுஞ்சாலை,
பொதுப்பணித்துறைகளின் அமைச்சராகவும் உள்ளார்.
லீமா ரோஸ் மார்ட்டின் லால்குடி தொகுதியில் போட்டியிட்ட போது தனது
விண்ணப்பத்தில் தன் மீது 4 வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதில் தனது சகோதரன்
மற்றும் மகள் மீது உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட
குற்ற எண் 533, 2018 வழக்கை முதல் வழக்காக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சர்வதேச
போதை பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிடோவுக்கும் லீமா ரோஸ் மார்ட்டின் அவரது மகள் டெய்சி
ஆதவ் அர்ஜூனா தொடர்புகள் அதிகாரப்பூர்வமாக நிரூபணமாகி உள்ளது.
தமிழகத்தில் முதல்வராக உள்ள தவெக தலைவர் விஜய், மாநிலத்தில் மூளை
முக்கு எல்லாம் போதை பொருட்கள் பரவி கிடக்கிறது அதை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு
உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து வருகிறார். தவெக அரசியில் அமைச்சராக உள்ள ஆதவ்
அர்ஜூனாவின் மனைவி டெய்சி மற்றும் அவரது மாமியாரும் அதிமுக லால்குடி சட்டமன்ற உறுப்பினரான
லீமா ரோஸ் மார்ட்டின் மீது போதை பொருள் மூலம் கிடைத்த பணம் தொடர்பாக அமலாக்கத்துறை
பதிவு செய்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்து வருகின்றனர்.
உண்மை இருப்படி இருக்க முதல்வர் விஜய் எப்படி தமிழகத்தில் போதை பொருள் ஒழிக்க போகிறார்
என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஒன்றிய பாஜக அரசு, தவெக – காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதால்,
தவெக அரசுக்கு நெருக்கடியை அளிக்கும் வகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கிடப்பில் இருந்த
போதை பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோ மற்றும் அவரது உறவினர்கள் மீதான போதை பொருள்
கடத்தல் வழக்கு மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளை மீண்டும் கையில் எடுத்துள்ளது. இதனால்
அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் தவெக அரசின் அமைச்சராக உள்ள ஆதவ்
அர்ஜூனா மனைவி டெய்சி மற்றும் அவரது மாமியாரான அதிமுக லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின்
ஆகியோர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரத்தில் இருந்து தகவல்
கசிந்துள்ளது.
போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க, போதை பொருள் தடுப்பு பிரிவு
உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் முதல்வர் விஜய். ஆனால் தவெக அரசில் அமைச்சராக உள்ள
ஆதவ் அர்ஜூனாவின் மனைவி டெய்சி, மாமியார் லீமா ரோஸ் எம்எல்ஏ மீது போதை பொருள் மூலம்
கிடைத்த பணம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியாக
இருந்து வருகின்றனர். பின் எப்படி தமிழகத்தில் போதை பொருளை விஜய் ஒழிக்கப் போகிறார்
என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த கேள்விகளை எல்லாம் திமுக எழுப்பிய நிலையில் தவெக சார்பில்
விடுக்கப்பட்ட அறிக்கையில், ‘’தி.மு.க வின் அரசியலே ஒட்டுமொத்தமாக பொய்யும், புரட்டையுமே
தங்களது அரசியல் வழியாக காலந்தோறும் செய்துவருகிறது. அவதூறு செய்திகளை தற்போது பரப்பி,
தங்கள் அரசியல் நாகரீகம் அற்றவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்துவருகிறார்கள்.
அரசியலில் நேருக்கு நேர் எதிர்கொள்ள துணிவில்லாமல் தேர்தல் தோல்வியால்,
பித்துப் பிடித்த மனநிலையில் உள்ள திமுக தலைமை, மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை
குறிவைத்து உண்மைக்கு மாறான வதந்திகளை தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். திமுகவின். இதுபோன்ற
அவதூறுகள் மற்றும் பொய்யுரைகளை கண்டுதான் மக்கள் அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடத்தை
தேர்தல் நேரத்தில் கொடுத்தார்கள். தற்போது அமலாக்கத்துறை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள
குறிப்பிட்ட நபருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு துளி அளவும் தொடர்பு இல்லை. தைரியம்
இருந்தால் அதை சட்டரீதியாக தி.மு.க ஐ.டி விங் இதை நிரூபிக்கட்டும்.
தி.மு.க வின் பொய்களுக்கும், வதந்திகளுக்கும் நாகரீகமற்ற குற்றசாட்டுகளுக்கும்
விரைவில் சட்டரீதியாக நாங்கள் பதிலடி கொடுப்போம். அமைச்சர் மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை
முன்வைத்து தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட தி.மு.க ஐ.டி விங்கை சட்ட ரீதியாக
எதிர் கொள்வோம்…அபாண்ட பொய்களையும், அவதூறு செய்திகளைப் பரப்பியே பழக்கப்பட்ட தி.மு.க
ஐ.டி விங்கின் முகமூடியை மக்கள் முன் உண்மைப்படுத்துவோம்..’’ என்று ஆவேசம் காட்டியுள்ளது.
இப்போது அடுத்த பஞ்சாயத்தை தவெகவினர் எழுப்பியிருக்கிறார்கள்.
அதாவது அமலாக்கத்துறையில் சிக்கிய ஜான் பிரிட்டோவின் தந்தை பெயர் இருதயராஜ். அதனால்
அவர் ஐ. ஜான் பிரிட்டோ. லீமா ரோஸ் அவர்களின் தந்தை பெயர் பிலிப். அதனால் அவர் பி. ஜான்
பிரிட்டோ என்கிறார்கள்.
இதற்கு பதிலடியாக ஐ.ஜான் பிரிட்டோ என்றால் வேளச்சேரி செயிண்ட்
பிரிட்டோ தாளாளரும், எஸ்.ஏ.சந்திரசேகர் சகோதரி மகள் விமலா ராணியின் கணவர். அதாவது நடிகர்
விஜய்யின் சொந்த அத்தை மகளின் கணவர். பி.ஜான் பிரிட்டோ என்றால் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார்
லீமா ரோஸின் சகோதரர். அதாவது டெய்ஸி ஆதவ் அர்ஜுனாவின் தாய் மாமன் என்கிறார்கள்.
இப்படி எந்த பக்கம் திரும்பினாலும் கட்டயைப் போட்டா எப்படி..?
தூய சக்தி என்பதை எப்படி நிரூபிக்கப் போகிறார் விஜய்..?
