News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

திமுக ஆதரவு ஊடகங்கள் எல்லாமே இண்டி கூட்டணியில் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை என்று எழுதிவரும் நிலையில், இண்டி கூட்டணியில் இருந்து திமுகவுக்குக் கல்தா என்று காங்கிரஸ்காரர்கள் கூறிவருகிறார்கள். 

 

பாஜக மக்கள் விரோத கொள்கை பின்பற்றுகிறது எனவே டெல்லிக்கும் எங்களுக்கும் போட்டி என தேர்தலுக்காக வீர வசனம் பேசிய திமுக  தலைவர் ஸ்டாலின் இன்று டெல்லியில் அதே பாஜகவை எதிர்த்து போராடும் இந்தியா கூட்டணி கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம், இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி உட்பட சுமார் 23 கட்சிகள் பங்கேற்க உள்ளன

திமுக பங்கேற்கவில்லை என்றதும் ப.சிதம்பரம் துவங்கி, கிரிஷ் சோடங்கர், கார்கே, நாராயணசாமி, சிவக்குமார், ஶ்ரீமாவளவன், லோக்கல் காங்கிரஸார் சிலர் உள்ளிட்ட பலரும் திமுகவின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும்… அதில் சிலர், திமுகவின் இந்த முடிவானது, பாஜகவுக்கு சாதகமாக அமைந்து விடும் என்று எச்சரிக்கை செய்தார்கள். ஆனாலும் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. 

இந்த விஷயத்தில் ஸ்டாலின் உறுதியாக இருந்ததும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திமுகவை ஒரு பொருட்டாக மதிக்காமல் அடுத்தகட்டப் பணியில் இறங்கிவிட்டனர். அதாவது திமுகவை வெளியே விரட்டிவிட்டனர்.

ஆகவே, இன்றைய கூட்டணி காங்கிரஸை மையமாகக் கொண்ட எதிர்க்கட்சிக் கூட்டணியா? அல்லது பிராந்திய சக்திகளை மையமாகக் கொண்ட புதிய தேசிய மாற்று அணியா? என்ற விவாதத்தை மீண்டும் தேசிய அரசியலின் மையத்திற்கு கொண்டு வந்திருக்கிறது திமுகவின் இந்த ஒரு முடிவு.

எப்படிப் பார்த்தாலும் பாஜகவுக்குக் கொண்டாட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link