News

பிரேமலதாவுக்கு ஒண்ணு. திமுகவுடன் காங்கிரஸ் பஞ்சாயத்து ஓவர்.

Follow Us

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சார்பில், திமுகவிடம் இருந்து தமிழகத்தை மீட்கும் போராட்டத்தை அனைத்துக் கூட்டணிக் கட்சித்தலைவர்களும் இணைந்து மேற்கொண்டனர்.

 சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையிலும், தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையிலும், கடலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலும், மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும் நடைபெற்றது. இதேபோன்று, விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

சி.வி.சண்முகம் பேசுகையில், “அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒரு படி மேலே சென்று, உங்க கனவ சொல்லுங்க என்கிறார். எனக்கு நயன்தாரா வேண்டும் என்றால் நிறைவேற்றுவாரா? எனக்கு நயன்தாராவை கல்யாணம் செய்துவைக்க வேண்டும் என்று சொல்வான், அதை நிறைவேற்றுவாரா முதல்வர்?” என்று பேசினார்.

அரசியல் கட்சிக் கூட்டத்தில் சினிமா நடிகையான நயன்தாராவை இழுத்துப் பேசிய விவகாரம் மீடியாக்களில் பரபரப்பானது. உடனே அரசியல் கட்சியினர் சிலர் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து உடனே சண்முகத்தை மன்னிப்புக் கேட்கச் சொல்லி உத்தரவு போட்டார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்தே, ‘பேச்சு மொழியில் அப்படிப் பேசிவிட்டேன்’ என்று மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

கஷ்டப்பட்டு ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினால், நயன்தாரா பேரைச் சொல்லி ஒட்டுமொத்த விவகாரத்தையும் திசை திருப்பிவிட்டாரே என்று அதிமுகவினர் நொந்து போகிறார்கள்.

இந்த பஞ்சாயத்து முடிவதற்குள் திமுகவினர் சேலை மட்டும்தானே கொடுக்கிறார்கள். பாவாடை யார் தருவா என்று கேட்டிருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link