Share via:
அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி
ஒன்றில் மேற்கொண்ட ஆய்வும் அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் வில்லங்க வைரலாகிவருகிறது.
விருதுநகர் பள்ளி மாணவிகளுடன் பேசிய அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில்
கேள்வி எழுப்ப, பள்ளி மாணவி பதில் அளிக்க தயங்கியதால், ஆசிரியரிடம் ஆங்கில வகுப்புகளை
மேம்படுத்த அறிவுறுத்தினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, “அரசு பள்ளி மாணவியை கேலி
செய்தார்” என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? நானே
ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை
வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல… என்னைப் போன்ற அரசு
பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.
மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள்
எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது
அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள். இன்னொரு கேள்வி…
இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின்
சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்?’’ என்று
கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் கீர்த்தனா பொய் சொல்லி இருப்பதாக இப்போது
புகார் சொல்றார்கள். அதாவது அவர் க்ஷத்திரிய வித்யாசாலா நடுநிலைப் பள்ளியில் படித்திருக்கிறார்..
இந்தப் பள்ளி, விருதுநகர் க்ஷத்திரிய பெண்கள் பள்ளிகள் நிர்வாக வாரியத்தின் கீழ் இயங்கும்
அரசு உதவி பெறும் தனியார் பள்ளி. அப்படியானால், தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் முதலீட்டு
மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களுக்கு அரசு பள்ளிக்கும் அரசு உதவி பெறும் பள்ளிக்கும்
உள்ள வித்தியாசம் தெரியவில்லையா? அல்லது அவர் வெளிப்படையாக பொய் கூறுகிறாரா? எது எப்படியிருந்தாலும்,
இந்த ரீல்ஸ் மந்திரி அவமான சின்னமாகவே மாறி இருக்கிறார் என்று மீண்டும் கீர்த்தனாவுடன்
மல்லுக்கட்டுகிறார்கள்.