News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தங்களது எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய சொல்லி விட்டு. மீண்டும் காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

ஏனென்றால் நேற்றைய கவர்னர் அவமானத்தை விஜய்யால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதோடு பாதுகாப்பு குறைப்பு அவரை இன்னமும் டென்ஷன் ஆக்கியுள்ளது.

தனிப்பெரும்பான்மையை வாக்கு எண்ணிக்கையின் எந்தவொரு நிலையிலும் பெறாத தவெக தலைவருக்கு கான்வாயை அனுப்புவதற்கு முன்னதாக பல முறை யோசித்திருக்க வேண்டும். ஆனால், அனுப்பிவிட்டு அதை வாபஸ் பெறுவது மிகப்பெரும் சிக்கலாகியுள்ளது.

ஆட்சியமைக்க உரிமை கோரி, ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கும் போது எவ்வளவு எம்எல்ஏகளின் ஆதரவு உள்ளது என்பதை கேட்ட பிறகே தவெக தலைவருக்கு ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கியிருக்க வேண்டும், இதனை செய்யாமல் எதன் அடிப்படையில் நேரம் ஒதுக்கினார்கள் என தெரியவில்லை.

நீதிமன்றத்துக்குப் போக தவெக ஆலோசனை செய்துவருகிறது. அதேநேரம், அங்கேயும் 118 பேர் ஆதரவு கடிதம் கேட்டால் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. அதனால் ஒட்டுமொத்த ராஜினாமா செய்யலாமா என்று யோசிக்கிறார்கள்.

ஆனால், திமுகவும் அதிமுகவும் உடனடி தேர்தலை சந்திக்கத் தயாராக இல்லை. விஜய் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் உடனடியாக தேர்தல் வர வாய்ப்பு இல்லை. கவர்னர் ஆட்சியே நடக்கும். அதற்கு காரணமாக மாறுவாரா விஜய்.? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link