News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

விஜய் முதல்வராக அமரப்போகிறார் என்று இரண்டு நாட்களாக தமிழகம் முழுக்க பரவியிருந்த கொண்டாட்ட மனநிலை, சட்டென்று நேற்று வடிந்துவிட்டது.

கவர்னரை சந்தித்துவிட்டு திரும்பிய விஜய்க்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது விஜய் வசிக்கும் நீலாங்கரை வீடு, பனையூர் கட்சி அலுவலகம் ஆகிய இடங்களில்  கடந்த இரண்டு நாட்களாக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அவர் வீடு இருக்கும் தெருவுக்குள் அனுமதி பெற்று உள்ளே வரும் வாகனங்களின் நம்பர் போலீஸாரால் பதிவு செய்யப்பட்டு வந்தன. தற்போது, ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிருபிக்க கூறிய கவர்னரின் உத்தரவுக்குபின், விஜயின் கான்வாய் வாபஸ் பெறப்பட்டது. தற்போது, அவரின் வீடு, தெரு, நகரில் இருந்த போலீஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஆதரவு எம்எல்ஏக்களின் முழுப்பட்டியலை தந்தால்தான் ஆட்சியமைக்க அழைப்புவிடுப்பேன் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் முரண்டு பிடிக்கிறார்.

காங்கிரஸ் தவிர வேறு யாரும் வெளிப்படையாக ஆதரவு கொடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில் இப்போதைக்கு விஜய் முதல்வராகும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறடு. ஏனென்றால் மே 9, மே 10, மே 11 ஆகிய தினங்கள் அஷ்டமி, நவமிஎன்பதால் பதவி ஏற்பு நடக்காது. மே 12  செவ்வாய்கிழமை பொதுவாக யாரும் பதவி ஏற்க மாட்ட்டார்கள்.

எனவே, அடுத்த வாய்ப்பு மே 13ம் தேதி புதன்கிழமை முகூர்த்தநாள். அதற்குள் பதவியேற்பு நாள் வாங்க முடியுமா என்பது கேள்வி.

ஏனென்றால், விஜய் இடத்தில் இந்நேரம் திமுக இருந்திருந்தால் ஆளுநர் அரசியலமைப்பை மீறி பேசியிருக்க முடியாது. இந்த நேரம் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருப்பார்கள். மொத்த கட்சியும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு இருக்கும். ஆனால் விஜய் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைகிறார்.

பாஜக விஜய்க்கு முட்டுக்கட்டை போடுவதற்கு என்ன காரணம் என்றால், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி, இப்போது கேரளாவிலும் காங்கிரஸ் ஆட்சி. இந்த சூழலில் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அனுமதிக்கத் தயாராக இல்லை என்கிறார்கள். காங்கிரஸைக் கழட்டிவிட்டால் அதிமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக உதவி செய்யும் என்கிறர்கள்.

என்ன செய்யப்போகிறார் விஜய்..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link