News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

விஜய் வெற்றியை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும், தோல்விகளைக் கண்டு பழக்கப்பட்ட ஸ்டாலின் அமைதி காக்கிறார். ஆனால், விஜய்யை முதல்வராக பதவியேற்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் உதயநிதி பல்வேறு நடவடிக்கைகளை செய்துவருகிறார்.

நேற்று அதிமுக ஆட்சியமைக்க திமுக ஆதரவு கொடுக்கிறது என்று செய்திகள் வெளியாகின. இதற்கு பேச்சுவார்த்தை நடந்தது உண்மை என்றாலும், திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் அவசரப்படாமல் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் என்ற அணுகுமுறையை கையில் எடுத்துள்ளன.

அதேநேரம், சட்டமன்றத்தில் தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதை தமிழக வெற்றி கழகம் நிரூபிக்க முடியாமல் தோல்வி அடையும் வரை எந்த நேரடி முடிவுகளும்  எடுக்காமல் இருக்க திட்டமிட்டுள்ளனர்.

அதாவது விஜய் தலைமையில் ஆட்சியமைக்கத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை என்பதை விஜய் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால், திமுகவும் அதிமுகவும் இணைந்துகொள்ளும்.

இந்த காலகட்டத்தில் திடீர் தேர்தலை தமிழ்நாடு சந்திக்க முடியாது என்ற கருத்தை முன்வைத்து அரசியல் நிலைத்தன்மைக்காக ஒன்றிணைவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், விஜய்க்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் யாரும் தங்கள் கூட்டணியில் இருந்து சென்றுவிடக் கூடாது என்பதற்கு திட்டமிட்டு வேலை பார்க்கிறார்கள்.

திமுக, அதிமுக அரசியல் விளையாட்டில் இருந்து தப்புவாரா விஜய்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link