News

வன்னியரசு, ஷாஜகான் பதவியேற்பு. விஜய்க்கு புதிய கூட்டணி ரெடி.

Follow Us

இன்று எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும் வேலுமணி தரப்புக்குமான இணைப்புக்குப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க போராடிக்கொண்டிருந்த திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரே நேரத்தில் அல்வா கொடுத்துவிட்டு விஜய் பதவிக்கு வந்துவிட்டார். ஆட்சி அமைப்பதற்கு நடந்த களேபரத்தில் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு சிவி சண்முகம், வேலுமணி தலைமையில் ஒரு அணி உருவானது.

அதிமுகவில் இருந்து வெளியே வந்த அணிக்கு 32 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்கவில்லை. மொத்தமிருந்த 47 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிசாமி பக்கம் 22 எம்.எல்.ஏ.க்களும் சிவி.சண்முகம் பக்கம் 25 எம்.எல்.ஏ.க்களும் ஒன்று கூடியும் அவர்கள் ஆசைப்பட்டது நடக்கவில்லை. விஜய் அங்கீகாரம் கொடுத்தார் என்றாலும் தொடர்ந்து ஆதரவு கொடுக்கவில்லை.

இப்போது விஜய் அமைச்சரவை கிட்டத்தட்ட முழுமை பெற்றுவிட்டது. இனிமேல் அங்கு அமைச்சர் பதவிக்கு வாய்ப்பே இல்லை எனும் சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் சரண்டர் ஆவதற்கு விலகிய டீம் முடிவுக்கு வந்திருக்கிறது.

இதற்கு தூது வந்தவர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் முதல் டிமாண்ட் என்ன தெரியுமா? தேர்தல் ஆணையத்தில் கொடுத்த புகாரை திரும்பப் பெற வேண்டும். கட்சியை கைப்பற்றும் முதல் படியாக அந்த மனு கொடுக்கப்பட்டதாக எடப்பாடி தரப்பு கருதுகிறது. அதனால் முதலில் அந்த ஆயுதத்தை கீழே வையுங்கள்!” என்று அவர்கள் நிபந்தனை வைத்திருக்கிறார்கள்.

அதற்கு சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி அணியினர் சம்மதம் தெரிவித்தாலும் எங்களிடம் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவிகள், கட்சிப் பொறுப்புகள்… அனைத்தையும் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறார்கள். ஆனால், இந்த விஷயத்தில் உடனடியாக பதவி கொடுக்கப்படாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.

முதலில் கட்சிக்குள் வாருங்கள், மாநில அளவிலான பதவிகள் கொடுக்கிறோம். மாவட்டச்செயலாளர் பதவி குறித்து பிறகு பேசிக்கொள்வோம் என்று சொல்லியிருக்கிறார்.

என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறது வேலுமணி & சண்முகம் டீம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link