News

வன்னியரசு, ஷாஜகான் பதவியேற்பு. விஜய்க்கு புதிய கூட்டணி ரெடி.

Follow Us

திமுகவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளாக கிட்டட்தட்ட 10 வருடங்கள் இணைந்து பணியாற்றிய காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் பதவிக்காக இடம் மாறியிருப்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அதிகம் கோபப்படுத்தியிருக்கிறது.

இனி, தேர்தல் வியூகத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார். நாகரிக அரசியல் எடுபடாது என்பதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருக்கும் நெருக்கமான ஆதரவாளர்களை சந்தித்துப் பேசியதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் சந்தித்துப் பேசியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த முறை சீட் கொடுக்கப்படாத காரணத்தால் அதிருப்தியில் இருக்கிறார்.

இந்த நிலையில், இந்த தேர்தலில் சீட் கொடுக்கப்படாத பனையூர் பாபு கட்சியில் இருந்து வெளியேறியிருக்கிறார். இதுகுறித்து அவர், ‘’சாதி வெறி மற்றும் மத வெறி சக்திகளை அடையாளம் கண்டு அவர்களைச் சமரசமின்றி எதிர்ப்பதில் இந்திய அரசியல் களத்திலேயே திருமாவளவனுக்கு நிகர் யாருமில்லை என்று நான் முழுமையாக நம்பினேன். என்ன நெருக்கடி வந்த போதிலும், பதவிகளோ பரிசுகளோ ஆசை காட்டப்பட்ட போதும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் மலை போல் உறுதியாக இருப்பார் என்று நம்பினேன்.

விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்துக்கு தான் செல்ல வேண்டும் .. சட்டமன்றம் வரக்கூடாது .. அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் வகுத்த கொள்கைகளை மழுங்கடிக்க வந்தவர்கள் என்று சூளுரைத்த திருமா இன்று அவர்களுடனே கைகோர்ப்பது முரண்பாட்டின் உச்சம்.

சமீப காலமாக தலைவர் திருமாவளவனின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன.  தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பேசுவது அரசியல் களத்திலும் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றும் தலைமையின் கீழ் இனி பயணிக்க முடியாது’’ என்று கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இந்த விலகலுக்கு விசிகவை சேர்ந்த சிந்தனை செல்வன், ‘’அருமைத்தோழர் பனையூர் பாபு தன் முடிவை மறுப்பரிசீலனை செய்ய வேண்டும். அண்மைகால முடிவுகளின் மீது தாங்கள் வெளிப்படுத்திய வருத்தம் புறந்தள்ளக்கூடியது அல்ல. ஆயினும் ஒன்றை பணிவுடனும் உரிமையுடனும் சுட்டிக்காட்ட கடமை பட்டிருக்கிறேன். தலைவரின் எந்த முடிவும் தன்னலம் சார்ந்ததல்ல.

உத்தி மாறினாலும் சாதி ஒழிப்பையும் சனாதன எதிர்ப்பையும் கை விடவா போகிறோம் நாம் ? நிகழ்ந்து முடிந்திருப்பது அரசியல் மாற்றம் மட்டுமல்ல. இளையத்தலைமுறையினரின் சமூக மாற்றத்திற்கான பெரு விருப்பம் காட்டாற்று வெள்ளமாய் ஜென்சி அலையென வெடித்திருக்கிறது.

அன்புள்ள பாபு… அண்ணனிடம், நம் தலைவரிடம் உங்கள் வருத்தங்களை விமர்சனங்களை தாராளமாக முன் வையுங்கள். மாறுபட்ட கருத்துக்களை மனம் விட்டு பேசாதவரா நம் தலைவர். எனக்கு உடன்பாடில்லையெனினும் தங்களின் கருத்தை மதிக்கிறேன். ஆயினும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்…’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேநேரம், ஸ்டாலின் அரசியலில் மாட்டியே பனையூர் பாபு வெளியேறியிருக்கிறார். அடுத்த சில நாட்களில் மேலும் பலர் வெளியே வருவார்கள். பட்டியலின மக்களுக்காக கூட்டணியில் ஒரு கட்சியை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை எனும் அளவுக்கு திமுகவில் பட்டியலின மக்களுக்குப் பதவிகள் கொடுத்து புதிய அரசியலை முன்னெடுக்க இருக்கிறாராம் ஸ்டாலின்.

பேராசான் இதை தாக்குப்பிடிப்பாரா என்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link