Share via:
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி ‘Start run, Stop Drugs’ என்ற தலைப்பில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், மூன்று கிலோமீட்டர் ஓடி அட்டகாசம் காட்டியிருக்கிறார்.
பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை ஓடிய இந்த காட்சி விஜய் கட்சியினரை புல்லரிக்க வைத்துள்ளது. ஓடி முடித்தபிறகு, விழிப்புணர்வு மாரத்தான் பலகையில், “Sportsஐ எடு, Drugsஐ விடு” என்ற வாசகத்தை எழுதி முதல்வர் விஜய் கையெழுத்து ஓட்டார்.
இதையடுத்து 52 வயசுல எ கிலோ மீட்டர் அசராமல் ஓடுகிறார். இதற்குக் காரணம் 30 வருடங்களாக சாப்பாடு விஷயத்தில் ரொம்ப ஸ்டிரிக்ட். தினமும் எக்சர்சைஸ். தினமும் தண்ணியடிக்கிறார் என்று சொல்லப்படுவது பொய் என்பதை இன்றைய ஓட்டம் நிரூபித்துவிட்டது என்கிறார்கள்.
அதேநேரம், வழக்கம்போல் விஜய்யைப் பாராட்டி ஆதவ் அர்ஜூனா பேசிய விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது. இன்று ஆதவ், ‘’இதுவரைக்கும் இருந்த முதலமைச்சர்களிலே மராத்தான்ல ஓடுனது நம்ம அண்ணன் விஜய் மட்டும்தான். காலைல 5 மணிக்கு எந்திரிச்சு நிகழ்ச்சிக்கு 6.10க்கு எல்லாம் வந்துவிட்டார். உடனே 6.15க்கு எல்லாம் ஓட ஆரம்பித்துவிட்டார். இந்தியாலயே இவர மாதிரி யூத் முதலமைச்சர் யாருமில்லை’’ என்று பாராட்டித் தள்ளினார்.
ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் அதை முழுமையாக முடித்தார். ஹரியானா மாநில முதல்வர் நயாப்சிங் சைனி மாதத்திற்கு ஒரு மாரத்தான் போட்டியில் ஆவது கலந்து கொள்கிறார். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் என நிறைய முதல்வர்கள் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு ஓடியிருக்கிறார்கள். இப்படி பொய்யான தகவல்களைக் கொண்டு விஜய் ரசிகர்களை இன்னமும் விசிலடிக்கச் செய்யக்கூடாது என்று அரசியல் விமர்சகர்கள் கடுப்பாகிறார்கள்.
இதெல்லாம் ஒரு விஷயமா…? எங்கள் விஜய்தான் பெஸ்ட் என்று கொண்டாட்டம் போடுகிறார்கள் தவெகவினர். இப்படியே எதையாவது செய்து பரபரப்பு செய்துகொண்டால் போதும் என்று நினைக்கிறாரா விஜய்..?