News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

கரூர் சம்பவத்திற்குப் பிறகு தான் வெளியே செல்கையில் எவ்விதமான அசம்பாவிதங்களும் நடைபெறக்கூடாது என்பதில் நடிகர் விஜய் தெளிவாக இருக்கிறார். இதற்காக தொண்டர் படை அமைக்கப்படுகிறது.

இதனை நிர்வகிக்கும் பொதுப்புஓய்வு பெற்ற ஐஜி ரவிகுமாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ரவிகுமார் தலைமையில் 15 ஓய்வுபெற்ற காவல்துறை  டிஎஸ்பிக்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பொது செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

தொண்டர் படையை வழிநடத்தவும் தொண்டர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் வடிவமைக்கவும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் பிரிவு தொடங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஸ்டாலின் கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவு எடுத்துள்ளார். அதேநேரம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர் இதுகுறித்து, ‘’முதல் கட்ட சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து தெளிவான விளக்கம் இல்லாத நிலையில் இரண்டாவது கட்டம் ஏன்? “மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்பு தீவிரம் திருத்தம்” தமிழ்நாட்டில் மொத்தம் ஆறு கோடியை 36 லட்ச வாக்காளர்கள் இருக்கிறார்கள் இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படி சரி பார்க்க முடியும்?

நம் மண்ணின், மக்களின் உரிமைக்காக அரசியல் வேற்றுமைகளை புறந்தள்ளி இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது. அதேபோல் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் திமுகவின் சூழ்ச்சியையும் அறிந்தே இருக்கிறோம் தொகுதி மறு வரையறையை எதிர்க்கும் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டோம். ஆனால் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிரான திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கான நோக்கத்தையும், பின்னணியும் மக்கள் அறியாமல் இல்லை. தேர்தல் நெருக்கத்தில் திமுகவின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம், திமுக அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து மக்களை திசை திருப்பும் கபட நாடக அரசியல்’’ என்று கொதித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link