Share via:
தபால் வாக்குகளில் தமிழகம் முழுக்கவே விஜய்யின் தமிழக வெற்றிக்
கழகம் முன்னிலை பெற்றுவிட்டது. தபால் வாக்குகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு,
தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன் பாஜக முன்னணி தலைவர்கள் வானதி
சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய அத்தனை பேரும் விஜய்யிடம் மண்ணைக் கவ்வியிருக்கிறார்கள்.
அரசு ஊழியர்கள் இப்படி விஜய்க்கு மாங்கு மாங்கு என்று வாக்குகளைக்
குத்தியிருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்..? எடப்பாடி பழனிசாமி எதுவும் செய்யவில்லை
என்று ஸ்டாலினுக்கு ஆதரவு கொடுத்தார்கள்.
ஸ்டாலின் காலத்தில் எக்கச்சக்க போராட்டங்கள் நடந்தன. கடைசி காலத்தில்
ஓய்வூதியத் திட்டம் என்று ஒன்றைக் கொண்டுவந்து ஏமாற்றிவிட்டார் என்று ஸ்டாலின் மீது
கடும் கோபத்தில் இருந்தார்கள். அதனாலே மாற்றிக் குத்திவிட்டார்கள். விஜய் வந்தால் மீண்டும்
பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவருவார் என்று நம்பியிருக்கிறார்கள்.
இதைக் கண்டு கொதிக்கும் திமுகவினர், ‘’மக்களின் வரிப்பணத்தில்
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பறிக்க வேண்டும்…’’ என்கிறார்கள்.
அரசு ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், மக்கள் மனதிலும்
ஏற்பட்டுள்ளது என்பதைப் போலவே வரும் தேர்தல் முன்னிலை நிலவரம் சுட்டிக்காட்டுகிறது.
காலை 10 மணி நிலவரத்தில் தவெக 90 அதிமுக 62 திமுக 52 என்று இருப்பதைப் பார்த்தால் ஏதோ
நடக்கிறது.
விசிலை ஊதுங்கப்பா.
