News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

 

மோடியின் சாமர்த்தியம் காரணமாக நாட்டில் சிலிண்டர் விலை உயரவில்லை, பெட்ரோல் விலை உயரவில்லை என்று பாஜகவினர் முழங்கிவந்தனர். அவர்கள் முகத்தில் சாணி அடிப்பது போன்று தேர்தல் முடிந்ததும் நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை நேற்று ரூ.993 அதிரடியாக உயர்த்தப்பட்டது.

ஒரேநாளில் 1000 ரூபாய்க்கு விலை உயர்த்தப்பட்டு சிலிண்டர் விலை 3 ஆயிரத்தை தாண்டியதால் ஹோட்டல் உரிமையாளர்கள், சிறு வணிக நிறுவனங்கள் தடுமாறி நிற்கிறார்கள். இப்போது கள்ளச்சந்தையில் 7 ஆயிரத்துக்கும் மேலாக சிலிண்டர்கள் விற்கப்படுகிறது.

தேர்தல்ல் ரிசல்ட்டுக்குக் காத்திருக்கும் மோடி, 4ம் தேதி ரிசல்ட்டுக்குப் பிறகு வீட்டு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தப்போகிறார் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் ராகுல் காந்தி.

இதுகுறித்து பேசியிருக்கும் ராகுல், ‘‘விலைவாசி உயர்வு எனும் வெப்பம் தேர்தல்களுக்கு பிறகு மக்களைத் தாக்கும் என்று நான் ஏற்கனவே எச்சரித்து இருந்தேன். வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.993ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவே ஆகும். இது ஒரு தேர்தல் கட்டணம் ஆகும். அடுத்த விலைஉயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் மீது இருக்கும். சாதாரண இந்தியர்களின் துயரங்கள் மீது ஆளும் கட்சிக்கு இருக்கும் அக்கறையானது தேர்தல் கால நாடகங்களுடன் மட்டுமே முடிந்துவிடுகின்றது. அதன் பிறகு மக்கள் தங்கள் போக்கில் தனித்து விடப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு விலைகள் உயர்த்தப்படாது, பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் சொன்னதை அவரால் செயல்படுத்த முடியவில்லை. மோடி பேச்சு காத்தோடு போச்சு.

போர் நடந்தால் மோடியால் வேறு என்ன செய்யமுடியும் என்று பாஜகவினர் இப்போது முட்டுக் கொடுத்துவருகிறார்கள். இந்த நிலையில், கொரோனாவை விட மோசமான ஒரு சூழலுக்கு நடுத்தர மக்கள் தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link