News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ‘வெற்றிப் பயணத் திட்டத்தை’ தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் அறிமுகமாகிறது.

இனிமேல் மகளிர் கட்டணமின்றி பயணிப்பதற்கு மாநகர/நகர எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் பேருந்துகள் மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் சாதாரண பேருந்துகளில் பயணிக்க முடியும்.

இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’இது, பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் மாபெரும் முயற்சி! ஒரு பெண்ணின் பயணம் என்பது வெறும் பேருந்துப் பயணம் அல்ல… அது அவளது கல்விக்கான பயணம், வேலைக்கான பயணம், குடும்பத்திற்கான பயணம், கனவுகளை நோக்கிய பயணம்.

தமிழ்நாட்டின் மதிப்புமிகு பாட்டிகள், அம்மாக்கள், அக்காக்கள், தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர்களின் பயணச் சுமையை குறைத்து, வாய்ப்புகளுக்கான பாதையை இன்னும் எளிதாக்கும் “வெற்றிப் பயணம்” திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. கட்டணமில்லா பயணம்… கட்டுப்பாடில்லா கனவுகள்… வாய்ப்புகளை நோக்கிய வெற்றிப் பயணம்! மகளிரின் ஒவ்வொரு பயணத்திலும் மக்களின் நலனை முன்னிறுத்தும் ஆட்சி.

அதேநேரம், அக்டோபர் 2ம் தேதி கிராமசபை கூட்டம் முதல்வர் விஜய், ‘வருகிற அக்டோபர் 2 தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.

கிராமத்தின் தேவைகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக கிராம சபையின் ஒப்புதலுடன் கூடுதல் தீர்மானங்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link