Share via:
காவிரிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவேண்டும்
என்று அத்தனை எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்ததை கண்டுகொள்ளாத விஜய், திடீரென எம்.பி.க்கள்
கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
நாளை மாலை 3 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில்
தொகுதி மறுவறையறை குறித்து ஆலோசிப்பதற்கு இந்த கூட்டம் கூட்டப்படுகிறது.
ஏனென்றால், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில்
தாக்கல் செய்ய பாஜக அரசு தயாராகிவிட்டது. இதனால் தமிழகம் மற்றும் தென் மாநிலங்களின்
அதிகாரப் பங்கீட்டு உரிமை கடுமையாகப் பாதிப்பதாகவும், நாடு முழுவதும் சிறுபான்மைவாக்காளர்கள்
தாக்கம் ஏற்படுத்தும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறுக்குவதாகவும் அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் விஜய்க்கு ஒரே ஒரு
எம்.பி.கூட இல்லை என்பதுதான் ஆச்சர்யம். இப்போது மக்களவையில் திமுகவுக்கு 22, காங்கிரஸ்
கட்சிக்கு 9, விடுதலை சிறுத்தைகளுக்கு 2, சிபிஎம் 2, சிபிஐ 2, மதிமுக 1, இந்திய முஸ்லீம்
லீக் 1 என்ற எண்னிக்கையில் எம்.பி.க்கள் உள்ளனர்.
இந்த கூட்டம் குறித்து பேசும் திமுகவினர், ‘’இப்படி ஒரு திடீர்
கூட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் ஒளிந்திருக்கிறது. எப்படியாவது திமுக எம்பிக்களை
இந்தியா கூட்டணிக்குள் கொண்டு வந்து தொகுதி மறுவரையறைக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக
அறிவிப்பதற்காக முயற்சிக்கிறார்கள்.
திமுக எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால் இந்த மசோதா வெற்றி பெறும்
வாய்ப்பு அதிகம் என்பதாலே திமுகவை கார்னர் செய்கிறார்கள். எப்படி என்றாலும் காங்கிரஸ்
எம்பிக்கள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் நிச்சயமாக உறுதியாக திமுக எம்பிக்கள்
கலந்து கொள்ளக் கூடாது.
ஒரு முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டலாம். அனைத்து கட்சி
எம்.பி.க்களை ஒரு முதலமைச்சர் கூட்டுவது வழக்கத்தில் இல்லை. இதை செய்கிறார் என்றால்
திமுக சார்பில் உதயநிஹி அல்லது அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்திக்க
அஞ்சுகிறார் என்றே அர்த்தம்’’ என்கிறார்கள்.