News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

கரூர் விஜய் விசிட்டில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஸ்டாலினை குற்றம் சாட்டிய ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது எதற்கு பேச வேண்டும்? அதை தாண்டி ஏன் சாட்சிகளுக்கு அரசு சலுகையாக வேலை வாய்ப்பு அறிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிபிஐ பதிவு செய்த புகாரில் ஆதவ் பெயர் உள்ளது. முதல் தகவல் அறிக்கையில் இல்லாத ஸ்டாலின் பெயரைச் சொல்லி காவல்துறை கொலை செய்தது என்று பேச முயற்சிப்பது ஏன்? என்று கேள்வி எழுந்துள்ளது.

அதோடு, கரூர் நெரிசல் மரணத்தில் இறந்த குடும்பத்தினர் அந்த வழக்கில் முக்கியமான சாட்சிகள். இப்போது அவர்களுக்கு அரசு வேலை வழங்கப் போகிறார்கள். இனிமேல் அவர்கள் வழக்கில் எப்படிச் சாட்சியம் அளிப்பார்கள்?

நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் தலா 20 லட்சம் நிவாரணத் தொகையை தவெக வழங்கியது. மு.க.ஸ்டாலின் அரசு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் நிதியுதவி வழங்கியது. மோடி அரசு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இதுதவிர தவெக-வின் நிர்வாகியான இன்றைய அமைச்சர் மரிய வில்சன், 41 பேரின் குடும்பங்களுக்கும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாதாந்திர வாழ்வாதார உதவியாக மாதம் 5,000 நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என உறுதி அளித்தார்.

இதன்படி பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 32 லட்சம் ரூபாய்க்கும் மேலாக உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தனைக்கும் பிறகு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேறு வழங்கப் போகிறார்கள். கரூர் நெரிசல் மரண வழக்கு விசாரணையில் இந்தக் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் அளிக்கப் போகும் சாட்சியத்திற்குச் சன்மானமாக அரசு வேலையா என்ற சந்தேகத்தைப் போக்க வேண்டியது அவசியம்!

இந்த நிலையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது விஜய் கரூர் செல்வது குற்றம் இல்லையா? வழக்கில் 41 குடும்பம் சாட்சியாக இருக்கும் போது அவர்களை விஜய் சந்திப்பது விசாரணையை திசை திருப்பும் செயலாக பார்க்கப்படாதா? இறந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு வேலை என்ற அறிவிப்பு லஞ்சமாக பார்க்கப்படாதா? வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கும் போது திமுக காவல்துறையை வைத்து கொன்று குவித்தது என்று சொல்வது விசாரணையை திசை திருப்பாதா?

விஜய் பதில் சொல்வாரா அல்லது எதையும் கண்டுகொள்ளாமல் கரூருக்குச் சென்று ஸ்டாலின் மீது மீண்டும் குற்றம் சாட்டுவாரா.?

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link