News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதைத் தடுப்பதற்கு ஒரு சூப்பர் திட்டத்தைக் கொண்டுவந்து மகத்தான சாதனை படைத்திருக்கிறார் முதல்வர் விஜய்

தமிழக அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மாவட்ட ஆய்வுக்கு வரும்போது அவர்களுக்கான செலவுகளை நாங்களே செய்கிறோம். அந்த செலவுகளை ஈடுகட்டுவதற்காக வேறு வழியின்றி லஞ்சம் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று சில அதிகாரிகள் வெளிப்படையாக புகார் கூறியிருந்தனர்.

இந்த புகாரில் இருந்த உண்மை தெரியவந்ததும்,  அந்த செலவுகளை அரசே ஏற்கும் வகையில் தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இனி ‘செலவு செய்தோம்… அதனால் லஞ்சம் வாங்கினோம்’ என்ற காரணத்தை சொல்லி எந்த அரசு அலுவலரும் தப்பிக்க முடியாது. லஞ்ச ஒழிப்பில் முதல்வர் விஜயின் அடுத்த அதிரடி என்று மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அதேபோல் போதை ஒழிப்பிலும் விஜய் மிகவும் உறுதியாக இருக்கிறார். நேற்றைய தினம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” – மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ‘போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்’ விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிப்பு நடவடிக்கைகளை காணொலி மூலம் பார்வையிட்டார் விஜய்.

இதையடுத்து, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் பணிக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார். மேலும், போதைப்பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் தலா 3 சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தலா 3 சிறந்த தன்னார்வலர் குழுக்களுக்குப் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கிச் சிறப்பித்தார்.

லஞ்சமும் போதையும் ஒழிந்துவிட்டால் தமிழகம் சூப்பர் நிலைக்குப் போய்விடும்.  லஞ்ச ஒழிப்பில் விஜய் மிக கவனமாக இருக்கிறார் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link