News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானங்களை விற்க தமிழக அரசு தடை போட்டுள்ளது. இதை மீறி விற்பனை செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வயதில் சந்தேகம் ஏற்பட்டால், ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை காட்டச் சொல்லி விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.

விஜய் ஆட்சிக்கு வந்ததும் 717மதுக்கடைகளை மூடுவதாக ஒரு கையெழுத்துப் போட்டார். அதேபோல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டார். இதற்கு ஃபயர் விட்ட தவெகவினருக்கு இவை எல்லாமே டூப்பு என்று தெரியவர அதிர்ந்து நிற்கிறார்கள்.

ஏனென்றால் யாரெல்லாம் முதல்வராக வருகிறார்களோ, அவர்கள் எல்லாமே முதல் கையெழுத்து அப்படித்தான் போட்டிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 500 மதுக்கடைகளை மூடினார். இத்தோடு, 2 மணிநேரம் கடையின் நேரத்தைக் குறைத்தார்.

2017ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, 500 மதுக்கடைகளை மூடினார். இத்தோடு, 169 பார்களையும் மூடினார். 2023ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஸ்டாலின் 500 மதுக்கடைகளை மூடினார். ஸ்டாலினும் 500 மதுக்கடைகளை மூடினார்.

இப்போது 2026ஆம் ஆண்டு முதல்வர் விஜய், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகே இருந்த 717 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்திருக்கிறார். எல்லா முதல்வர்களும் தலா 500 மதுக்கடைகளை மூடுகிறார்கள்.

அதேபோல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு டாஸ்மாக் கடையில் விற்பனை கூடாது என்ற அறிவிப்பும் வேஸ்ட். ஏனென்றால்,  பல வருடங்களாகவே மது வாங்குவதற்கு 21 வயது தான் குறைந்தபட்ச வயதாக தமிழகத்தில் இருக்கிறது. சட்டப்படி குடிப்பதற்கு வயது 21 என்றால் வாங்குவதற்கும் அதுதான் வாங்குவதற்கும் வயது.

அதேநேரம் ஐடி பார்த்து விற்பனை செய்ய உத்தரவு போட்டிருக்கிறார் விஜய். ஐடி சரி, அது உண்மையா என்று எப்படி பரிசோதனை செய்வார்கள் என்பதுதான் கேள்வி. வேறு ஒரு நபர் வாங்கிவந்து சிறியவர்களிடம் கொடுத்தால் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்..?

இப்படி சினிமாத்தனமாக எதையாவது செய்யாதீங்கண்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link