Share via:
பாஜகவில் இருந்து விலகிய விஜயதாரணி இன்று விஜய் கட்சியில் இணைந்தது
மிகப்பெரும் காமெடி வைரலாகிவருகிறது. பதவிக்கு ஆசைப்பட்டு பாழாப் போனவர் என்று விஜயதாரணியை
கிண்டல் செய்கிறார்கள்.
விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்தார்.
2011, 2016, 2021 என தொடர்ச்சியாக மூன்று தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திமுக கூட்டணியில்
எம்.எல்.ஏ. பதவியை வென்றார். எம்.பி.யாக ஆசைப்பட்டு கட்சியில் இருந்து வெளியேறினார்.
ஒரு கட்சியின் கொள்கை நிலைபாட்டில் மாறுபாடு கொள்ளும் நபர்கள்
அக்கட்சியிலிருந்து வெளியேறுவார்கள். ஒரு கட்சியில் தனக்குரிய அங்கீகாரம் இல்லாவிட்டால்
கட்சியை விட்டு வெளியேறுவார்கள். ஆனால், இவர் காங்கிரஸ் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு
பாஜகவில் போய் சேர்ந்தார்.
அங்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜகவில் வாய்ப்பு வழங்கவில்லை பாஜக.
அதன்பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் வாய்ப்பு இல்லை! 2026 தேர்தலில் அதே தொகுதியில்
நின்று மூன்றாம் இடத்துக்குப் போய்விட்டார். பாஜகவிலும் தனக்கு எதிர்காலம் இல்லை என்பது
உறுதியானதும் இப்போது விஜய் கட்சியில் இணைந்துவிட்டார். எப்படியாவது அமைச்சராவதுதான்
அம்மணியின் ஆசையாம். அதற்கு ஒப்புதல் வாங்கியபிறகே பிரிந்து வந்திருக்கிறார் என்று
சொல்லப்படுகிறது.
இப்படி பதவிக்கு நாயாக அலையும் ஆட்களை எல்லாம் கட்சியில் சேர்த்துக்கொண்டுதான்,
விஜய் மாற்றத்தைத் தரப்போகிறாரா என்பதுதான் கேள்வி.