News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு முதல்வர் விஜய்யை வேளாண்
துறை அமைச்சர் ஆர்.வினோத் கன்னாபின்னாவென்று புகழ்ந்து தள்ளினார். பண நாயகத்தை தோற்கடித்த
ஜனநாயகன், நீங்கள் பேரவையின் நாயகன் நீங்கள், கோட் சூட் போட்ட அணிந்த விவசாயி நீங்கள்
என்றெல்லாம் பாராட்டியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சபாநாயகரும்
கடுப்பாகி, ‘நிறுத்துப்பா’ என்று பட்ஜெட்டை வாசிக்கச் செய்தார்.

இன்று வேளாண் பட்ஜெட் தாக்கலாகும் நிலையில், உதயநிதி கைது, விவசாயக்
கடன் தள்ளுபடி, காவிரி நீருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவின்ர் கருப்புச்சட்டை
அணிந்து கூட்டத்திற்கு வந்தனர்.

இன்றைய வேளாண் பட்ஜெட்டில் இலவச மும்முனை மின்சாரம் 7432 கோடி
ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாடு
தளிர்கீரைகள் திட்டம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம்
சிறிய தளிர் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.

தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்த உயர் தொழில்நுட்ப
சாகுபடி முறைகள் ரூ.41 கோடியில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதில் சாமந்தி, ரோஜா, பழங்கள்,
காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களுக்கு நிழல்வலை கூடம், பசுமைக் குடில், நீர்த்தாரைப் பந்தல்
உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

நன்னெறி சாகுபடி மற்றும் நவீன அறுவடைக்கு பிந்தைய உள்கட்டமைப்பு
வசதிகள் ரூ.8.43 கோடியில் மேம்படுத்தப்படும். இதில் தரத்திற்கான உற்பத்தி, ஏற்றுமதி
மற்றும் குளிர்பதன வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 
விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிா் காப்பீடு வழங்க முடிவு. 43,500 தார்ப் பாய்கள் வாங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

எல்-நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி மின்வாரியத்திற்கு வழங்கப்படும். உழவர் ஐடி பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு 6 கோடி ரூபாயில் மண்வள அட்டை”

தென்னை சார்ந்த பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகத்திற்கு (TNCPC) ரூ5.30 கோடி ஒதுக்கீடு’. மாடித்தோட்டம் திட்டத்திற்கு, ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் என பெயர் சூட்டல் போன்ற அறிவிப்புகள் வெளியாகின. 

பனை பாதுகாப்பு இயக்கம் ரூ.2 கோடியில் செயல்படுத்தப்படும். பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம் மற்றும் பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கப்படும். கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.9 கோடியில் கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 17,315 ஏக்கரில் விதைக்கரும்பு மானியம் ரூ.9.36 கோடி செலவில் வழங்கப்படும்.

விதைச் சான்றிதழ் மற்றும் விதைச் சுத்திகரிப்பு வசதிகளை மேம்படுத்த
ரூ.7.10 கோடியில் மூன்று புதிய விதைச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பு மேம்பாடு ரூ.3.56 கோடி
மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு மண்வளம் பாதுகாப்பு இயக்கத்திற்கு 600 கோடி
ரூபாயில் ஐந்தாண்டு திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

இதற்கு திமுகவினர், ‘’கடந்த 2024-25ம் ஆண்டு திமுக ஆட்சியில் மண்
வளத்தை காக்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 178 கோடி ரூபாய் நிதியில்
செயல்படுத்தப்பட்டு இதுவரை சுமார் 21 இலட்சத்து 35 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
மேலும், 2025-26 ஆம் ஆண்டிலும், இத்திட்டம் 15 திட்டக்கூறுகளை ஒருங்கிணைத்து 142 கோடி
ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என இடைக்கால வேளாண் பட்ஜெட்டிலேயே
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை புதிய திட்டம் போல் அறிவித்தது மட்டும் அல்லாமல், 5 ஆண்டுகளுக்கு
ரூ.600 கோடி, அதாவது ஆண்டுக்கு ரூ.120 கோடி என நிதியை குறைத்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளது
இந்த தவெக அரசு..’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link