News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பெருமழையை சமாளிக்கும் வகையில் முதல்வர் விஜய் அமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கிவருகிறார். அதேநேரம், நெருக்கடிகளை சிறப்பாக சமாளித்தவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தியிருப்பது ரிப்பன் மாளிகையை குதூகலப்படுத்தியிருக்கிறது.

நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ,பொதுமக்களுக்கு மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் பாராட்டி கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.இரவு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர்த் தேக்கமின்றி சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

முதல் பரீட்சையில் தவெக ஆட்சி பாஸ் ஆகியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link