News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

தன்னை கிறிஸ்தவராக இதுவரை அடையாளம் காட்டிக்கொள்ளாத நடிகர் விஜய், நேற்று முதன்முதலாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அதோடு, மண்டியிட்டு நடந்து தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார். இதனால், கிறிஸ்தவ வாக்குகள் எல்லாமே விஜய்க்கு விழும் என்று அவரது ரசிகர்கள் குதூகலமாகிறார்கள்.

 

நேற்று விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட விமானநிலையம் வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கொட்டப்பட்டு பகுதிகளில் ரோடு ஷோவில் பங்கேற்று நேற்று வாக்குசேகரித்தார். வயர்லெஸ் சாலையில் சாலை வலம் சென்றபோது, அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்துக்குச் சென்று தரையில் மண்டியிட்டு சிறிது தொலைவு மண்டியிட்டு நடந்து சென்று ஜெபம் செய்தார்.

பின்னர், கே.கே.நகர் பகுதியில் உள்ள நூருல் ஹுதா பள்ளிவாசலுக்குச் சென்று அதன் தலைவர் மோத்தி ஹாஜியாரை சந்தித்து, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்பிறகு திருச்சி – புதுக்கோட்டை தேசியநெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு அருகே உள்ள பச்சநாச்சியம்மன் கோயிலில் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் விபூதி, குங்குமம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இப்படி ஒரே நாளில் மூன்று மதத்தைச் சேர்ந்த ரசிகர்களையும் மனம் குளிர வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பரஸ்பரம் பிரிந்து விடுவது என சுமூக முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சங்கீதாவுக்கு 100 கோடி ரூபாய் கொடுப்பதாக பேசப்பட்டுள்ளது என்கிறார்கள். அதேநேரம், சொத்தில் சங்கீதாவுக்கு எந்த பங்கும் கிடையாது. பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டியவை குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று பேசப்பட்டுள்ளது என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link