News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்த ராகுல் காந்தி, முதல் மீட்டிங்கில் மு.க.ஸ்டாலின் பெயரை கூட உச்சரிக்கவில்லை. அது விமர்சனம் ஆனதால் திருச்சி மீட்டிங்கில் வேண்டாவெறுப்பாக ஸ்டாலின் பேரைச் சொல்லிவிட்டு போயிருக்கிறார்.  

தமிழ்நாட்டுக்கு ராகுல் காந்தி வருகை தந்தாலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மூத்த அண்ணன் என்று அன்போடு அழைப்பது வழக்கம். ஆனால் ராகுல் காந்தி பொன்னேரி கூட்டத்தில் தற்போது ஸ்டாலின் பெயரை தவிர்த்து விட்டு வெறுமனே திமுக தொண்டர்கள் என்று மட்டும் தனது உரையில் குறிப்பிட்டார். அதோடு மட்டுமல்லாமல், மீண்டும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக வேண்டும் என்றோ, மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றோ ராகுல் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை.

பொன்னேரி கூட்டத்தில் 27 நிமிடங்கள் பேசிய ராகுல், முதல்வர் ஸ்டாலின் பெயரை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை. திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை, வாக்காளர்கலை ஆதரிக்க வேண்டும் என்பதோடு முடித்துக் கொண்டார்.  

மு.க.ஸ்டாலின் பெயரை உச்சரிக்காமல் தவிர்த்ததில் இருந்தே அவருக்கு இருந்த மன வருத்தமும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. வழக்கமாக தேர்தல் நேரங்களில் ராகுலும், ஸ்டாலினும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்வது வழக்கம் என்ற நிலையில் இந்த முறை ஸ்டாலினுடன் ஒரே மேடையேறுவதையும் ராகுல் காந்தி தவிர்த்து இருக்கிறார்.

இந்த விவகாரம் சர்ச்சையாகிறது என்பது தெரியவந்ததும் திருச்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேரை சும்மா ஒப்புக்காகச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அதோடு சோளிங்கர் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதை செல்வப்பெருந்தகை தப்புத்தப்பாக மொழிபெயர்ப்பு செய்ததும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

கூட்டணிக் கட்சியால் திமுகவுக்கு எதுவும் நல்லது நடக்கப்போவதில்லை என்றே தெரிகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link