Share via:
எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் விஜய்யின்
வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் இன்னமும் தொடர்பு எல்லைக்குள் வரவே இல்லை. அதனால் சுயேட்சை
வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமாருக்கு விஜய் ஆதரவு கொடுத்திருப்பது அரசியல் திருப்பமாகப்
பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து விஜய், ‘’எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை
வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார் அவர்கள்,
முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான்.
எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான
பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும்
நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் பிரேம்குமார் அவர்களை,
மனதளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள
வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம்
குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு
கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி,
குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்’’
என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
விஜய் பேச்சுக்கு மதிப்பு இருக்குமா என்று பார்க்கலாம்.
